Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 1, 2016

தந்தை, தாய்ப் பேண்!-சிறுகதை


கொள்ளக்குடி என்னும் கிராமத்தில் கோபிநாத் என்னும் சிறுவன் தன் தாய், தந்தையாருடன் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தான்.
அவன் அவ்வூர் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். அவனுடைய தாய், தந்தையர் கல்லுடைக்கும் ஏழைத் தொழிலாளிகள். அவர்களுடைய வருமானம் மிகவும் குறைவு. அதிலும், அவர்கள் மிச்சப்படுத்தி தங்கள் மகனைச் செல்லமாக வளர்த்தனர்.
தன்னைப் படிக்க வைக்க தாய், தந்தையர் படும் துன்பங்களை அவன் நன்றாக அறிவான். அதனால், அவன் படிப்பில் அதிகக் கவனம் செலுத்தி கண்ணுங்கருத்துமாகப் படித்தான். படிப்படியாக அவன் தேர்ச்சி பெற்று, முதுகலைப் பட்டப்படிப்பு படித்து முடித்தான்.
தான் பிறந்த ஊர் இருக்கும் மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவராக வரவேண்டும் என்பது அவனுடைய லட்சியமாக இருந்தது. அனைத்துச் செலவுகளுக்குமே பணம் வேண்டுமல்லவா? அவனுடைய பெற்றோர் பல நாட்கள் பட்டினியாக இருந்து பணத்தைச் சேமித்து அவனை ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத வைத்தனர். தன் படிப்புக்காக, தன் உயர்வுக்காகத் தன் தாய் தந்தையார் படும் வேதனைகளைக் கண்டு அவன் கண்ணீர் சிந்தினான். 
"தான் மாவட்ட ஆட்சித் தலைவராகி, தனக்காகப் பாடுபட்ட தன் பெற்றோரை அவர்களுடைய வயதான காலத்தில் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன்' என மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.
கோபிநாத் ஐ.ஏ.எஸ்., தேர்வில் மாநிலத்திலேயே முதல்வனாகத் தேறினான். அவன் நினைத்தபடியே அவன் ஊர் இருக்கும் மாவட்டத்திற்கே அவனை மாவட்ட ஆட்சித் தலைவராக்கியது அரசாங்கம். அதையொட்டி பதவியேற்பு விழா அந்த ஊரில் நடத்தப் பட்டது. ஊர்மக்கள் அனைவருமே அங்குக் கூடியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் கோபிநாத் பேச ஆரம்பித்தான்.
"என் அன்பு மக்களே, நான் இந்தக் கிராமத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவராக ஆனதற்கும், என்னை ஐ.ஏ.ஏஸ்., படிக்க வைத்த பெருமைக் கும் உரியவர்கள் என் கண்கண்ட தெய்வங்களான என்னுடைய அம்மா, அப்பா தான். அவர்களுக்கு மகனாகப் பிறந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்களை என் வாழ்நாள் முழுவதுமே கண் கலங்காமல் காப்பாற்றுவேன். அவர்களுடைய உழைப்பு இல்லையென்றால், இங்கு நான் உங்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவராக நின்றிருக்க முடியாது. இதோ உங்கள் முன்னிலையிலேயே அவர்களுடைய கால்களில் விழுந்து வணங்குகிறேன்,'' என்று கூறிவிட்டு தன் தாய் தந்தையரை மேடைக்கு வரவழைத்து அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினார்.
"என்னைப் போன்று இந்த ஊரில் இருக்கின்ற அனைத்து இளைஞர்களும் தங்கள் தாய், தந்தையரை அவர்களுடைய வயதான காலத்தில் கண்கலங்காமல் காப்பாற்றுங்கள்,'' என்று கூறினார்.
கூட்டத்திலிருந்து பலத்த கைத்தட்டல்கள் எழுந்தது. அனைத்து உயரதிகாரிகளும் கோபிநாத்திற்கு மரியாதை செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.