சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக 2002-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த ரமணன் நேற்று ஓய்வு பெற்றார். இந்திய வானிலை ஆய்வு மையத்தில் 1980-ல் மூத்த உதவியாளராக சேர்ந்த இவர், கடந்த 36 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றியுள்ளார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அளித்த பேட்டி:
உங்கள் பணியில் மறக்க முடியாத நாட்கள் எவை?
தானே புயலின்போது அதிகளவில் உயிர்களை காப்பாற்ற முடிந்தது. இதுபற்றி வானொலியில் தொடர்ந்து வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டதால் மக்கள் வெளியில் வரவில்லை. இது மக்களின் உயிரை காக்கும் சேவை. கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் சென்று இறக்கவில்லை. இதுவே மனதுக்கு நிறைவைத் தருகிறது.
சமூக ஊடகங்களில் உங்களைப்பற்றி வரும் கருத்துக்களை குறித்து?
நான் எந்த ஊடகத்திலும் உறுப்பினராக இல்லை. இ-மெயில் மட்டுமே பார்க்கிறேன். அவற்றில் கவனத்தை செலுத்தினால் பணியில் கவனம் செலுத்த முடியாது.
நம் நாட்டில் வானிலை ஆய்வுக்கான கட்டமைப்புகள் உள்ளனவா?
வானிலை கணிப்புகள் உலகளாவிய மாதிரியை பின்பற்றியது. வானிலையை பொறுத்தவரை, நாம் மட்டும் கணிப்ப தில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து உள் ளிட்ட பல்வேறு நாடுகள் உலகம் முழுமைக் கும் கணிக்கின்றன. அந்த தகவல்களையும் கொண்டுதான் நாம் கூறுகிறோம்.
இந்த கோடைகாலத்தில் வானிலை எப்படி இருக்கும்?
கோடையின்போது, வெப்பத்துக்கு தயாராக இருக்க வேண்டும். நிலக் காற்று வேகமாக இருக்கும். அதிகமாக காற்றடித்தால்தான் மழையும் வரும். கோடை வெப்பம் அதிகமாக இருந்தால் தால் மழையும் அதிகமாக இருக்கும். தென் மேற்கு பருவமழைக்கான சக்தி கிடைக்கும். அதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
வானிலை தொடர்பான படிப்புகள் குறித்து?
வானிலை தொடர்பான மேற்படிப்புகள் மிகவும் அவசியமானது. ஆனால், இந்தியாவில் இந்த படிப்புக்கு வேலை கிடைக்கும் என கூற முடியாது. இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சில பல்கலைக்கழகங்களில் வேலை கிடைக் கும். அமெரிக்காவை போல் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் வந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மேலை நாடுகளில் ஆராய்ச்சி படிப்பு முடித்தால் பிரகாசமான எதிர்காலம் உண்டு. இதற்கு ஐஐடி டெல்லி, காரக்பூரில் எம்டெக் சூழல் அறிவியல் படிக்க வேண்டும். அதன் பின் மேற்படிப்பு படிக்கலாம்.
பருவகால மாற்றம் தொடர்பாக தங்கள் அறிவுரை என்ன?
சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் 2 டிகிரி வெப்பம் அதிகரித்துள்ளது. இதை தடுக்கமுடியாது; அனுசரித்து தான் போக வேண்டும். வெயிலின் தாக்கத்தை குறைக்க மாடித்தோட்டம் அமைக்கலாம். வெண் பூச்சு அல்லது சூரிய மின்தகடு அமைத்து மின்சாரத்தையும் உற்பத்தி செய்யலாம். தரையில் சிமென்ட் போடுவதை விட செடி வைத்து பராமரித்தால், வெப்பத்தின் தாக்கம் குறையும்.
உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
பள்ளிகள், கல்லூரிகளில் வானிலை தொடர்பாக நடக்கும் உரையாடல்களில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற் படுத்துவேன். என்னிடம் கடைநிலை ஊழியர் முதல் மேல் நிலையில் இருப் பவர்கள் வரை நன்றாக பழகுவார்கள். அவர்களை இனி பார்க்கமுடியாதே என்பதில் வருத்தமாக உள்ளது. அதே நேரம் இனி குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க முடியும் என்பதில் மகிழ்ச்சி. வாழ்க்கையில் எதுவும் நிலை யானது இல்லை என்பதை புரிந்து கொண்டதால் எதுவும் என்னை பாதிக்கவில்லை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.