Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

மினி ஸ்டோரி - விளையாட்டு!


மஞ்சகுப்பம் என்னும் ஊரில் அன்று பெருமழை பெய்தது. ஏரி, குளம், கிணறு எல்லாம் நிரம்பி வழிந்தன. பயிர்களெல்லாம் தழைத்தன. பிரசாத்தும், சாரதியும் நண்பர்கள். அன்று, அவர்களுக்குப் பள்ளி விடுமுறை விடப்பட்டதால், இருவரும் குளத்தில் நீச்சலடிக்கச் சென்றனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் நண்பர்களைக் குளத்தில் நீந்திக் குளிக்க அழைத்தனர். ஆனால், அவர்களோ, ""அடைமழை பெய்துள்ளதால் குளத்தில் அதிக நீர் இருக்குமென்றும், ஆழம் அதிகமாக இருக்கும் என்றும் அதனால் குளத்தில் குளிக்கச் செல்லக்கூடாது என்று தங்கள் பெற்றோர் கூறியிருப்பதால் தாங்கள் வரவில்லை,'' என்றும் கூறிவிட்டனர்.
பிரசாத்தும், சாரதியும் அவர்களையெல்லாம் பார்த்து, ""போங்கடா பயந்தாங்கொள்ளிகளா,'' என்று கூறி விட்டு குளத்தில் நீந்தச் சென்றனர்.
இருவரும் நெடுநேரம் நீந்தினர். திடீரென்று பிரசாத், சாரதியை பார்த்து, ""நான் நீருக்குள் ஒளிந்து கொள்கிறேன். என்னை நீ கண்டுபிடி,'' என்று கூறி நீரில் மூழ்கினான்.
சாரதி நீருக்குள் உள் நீச்சல் அடித்தப்படியே பிரசாத்தை தேடினான். பிரசாத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நேரமாகிக் கொண்டே போனது. சாரதிக்குப் பயம் வந்து விட்டது.
"ஒருவேளை பிரசாத் நீருக்குள் மூழ்கி இறந்து விட்டானோ' என நினைத்தான். அவ்வாறு அவன் நினைத்தபோது நீருக்குள் இருந்தும், அவனுக்கு வியர்த்தது.
சாரதி மீண்டும் ஒருமுறை நீரில் மூழ்கிப் பார்த்து பிரசாத்தை தேடினான். அவன் கிடைக்கவில்லை. உடனே சாரதி கரைக்கு வந்து, உடை களை மாற்றிக் கொண்டு ஆட்களைக் கூட்டி வர ஊருக்குள் ஓடினான். ஆட்கள் வந்தனர். நீருக்குள் பாய்ந்து பிரசாத்தைத் தேடினர். இறுதியில் ஒருவர் பிரசாத்தை தோளில் போட்டுக் கொண்டு கரையேறினார்.
பிரசாத் நீருக்குள் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டதால், அவனால் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. சிறிதளவு சுவாசம் இருந்தது. உடனே ஆட்கள் அவனை மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்கச் செய்தனர்.
பிரசாத் உடல்நலத்துடன் வீட்டுக்குக் கிளம்பும் போது மருத்துவர் அவனிடம், ""துன்பத்தில் முடியும் விளையாட்டுகளை விடையாடாதே,'' என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.