Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 1, 2016

மீண்டும் பஞ்சம் ஏற்பட போகிறது... எச்சரிக்கும் வட கொரியா!


பொருளாதார தடையால் மீண்டும் பஞ்சம் ஏற்பட போகிறது என்று வட கொரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட கொரியாவில் கடந்த 1994 முதல் 1998 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி பெரிதும் துன்பமுற்றனர். உணவு இல்லாமல் தவித்த மக்கள் மரங்களின் வேர்களை வெட்டி உணவாக சாப்பிட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் எலிகளையும், இறந்து கிடந்த மனித சடலங்களையும் உணவாக சாப்பிட்டனர். இந்த பஞ்சத்தில் சிக்கி சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிமக்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் அப்போது உலகையே உலுக்கியது.

உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை, ஏவுகணையை செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் விளைவாக வட கொரியாவில் மீண்டும் பஞ்சம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தலைநகரான பியோங்யாங்கில் வசிக்கும் குடிமக்கள் அரசாங்கத்திற்கு மாதம் ஒருமுறை, ஒரு கிலோ அரிசி கொடுத்து சேமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் யோங், அரசாங்க பத்திரிகையான 'ரோடோங் சின்முன்'ல் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், ''குடிமக்களே, வட கொரியா நாட்டை தாக்க மீண்டும் ஒரு கடுமையான பஞ்சம் ஏற்பட போகிறது. மரங்களின் வேர்களை மீண்டும் சாப்பிடுவதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த பஞ்சத்தை எதிர்கொள்ள குடிமக்கள் தயாராக இருங்கள்.

அதுமட்டுமில்லாமல், இந்த பஞ்சத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், அதிபரையும், அரசாங்கத்தையும் குறை கூறக்கூடாது. நமது உயிரை கொடுத்தாவது அரசாங்கத்தின் பெயரை காப்பாற்ற வேண்டும்" எற்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.