புவனகிரி அழகான கிராமங்கள் நிறைந்த ஒரு சிற்றூர். அவ்வூரில் வாழ்ந்த பெரும் பணக்காரரின் பெயர் இளவழகன். அவ்வூரில் பாதி நிலங்கள் அவருக்கு உரிமையாக இருந்தன. அரிசி ஆலை, கரும்பாலை போன்றவையும் அவருக்கு உரிமையாக இருந்தன.
அந்தப் பெரியவருக்கு வாரிசு இல்லை. அவருக்குப்பின் அவர் சொத்தைக் காப்பாற்ற ஆள் இல்லை. இது அவருக்கு பெரிய மனக்குறையாக இருந்தது. அவருக்கோ வயது ஏறிக்கொண்டே இருந்தது.
அவருடைய உறவினர்கள் அவருடைய சொத்துக்களை அபகரிக்க அவரிடம் பாசம் இருப்பதுபோல் நடித்தனர். அவர் உடல் நலமுடன் இருக்கும்போதே, ""உங்களுக்குத் தலைவலி போல் இருக்கிறது. இந்தாருங்கள் இந்த மாத்திரை உட்கொள்ளுங்கள்,'' என்று அவரிடம் அன்பு காட்டுவது போல் நடித்தனர்.
அந்த ஊரில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்றில், தமிழ் ஆசிரியராக இருந்தார் ஜெயக்குமார் என்பவர். அவர் மிகவும் இனிய பண்பாளர். எப்போதும் வெள்ளைச் சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்து இருப்பார். அவருடைய உடைகளைப் போன்றே அவருடைய மனமும் வெள்ளையாகவும், யாருக்கும் துன்பம் தர நினைக்காத தூய மனதாக இருந்தது. நல்வழியில் நடக்க வேண்டும் என்று அவர் மாணவர்களுக்கு உபதேசிப்ப தோடு அல்லாமல், தானும் வாழ்வில் அவ்வாறே நடந்து வந்தார்.
இதனால் அவ்வூரில் ஜெயக்குமார் ஆசிரியருக்கு நல்ல பெயர் இருந்தது. மக்கள் அவர்மீது அன்பைப் பொழிந்தனர். இவர், கோடீஸ்வரருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார்.
பணக்காரரான கோடீஸ்வரர் ஒருநாள், அந்த ஊர்மக்களுக்குத் தான தர்மங்கள் செய்து கொண்டிருந்தார். உடனே, அவருடைய உறவினர்கள் ஓடிவந்து, ""இப்படி நீங்கள் தான தர்மங்கள் செய்தால் கடைசியில் ஒன்றுமில்லாதவர்களாகி விடுவீர்கள். செல்வத்தைச் சேர்க்க வேண்டுமே தவிர, அதனை தான தர்மம் செய்து வீணாக்கக் கூடாது,'' என்று அறிவுரை கூறினார்.
அந்நேரத்தில் அங்கு தமிழாசிரியர் ஜெயக்குமார் வந்தார். அவர், கோடீஸ்வரருடைய உறவினர்களைப் பார்த்து, "உங்களுடைய சொத்துக்களைத்தான் நீங்கள் தான தர்மம் செய்வதில்லை. கோடீஸ்வரராவது தன்னுடைய சொத்தை மக்களுக்கு வழங்கட்டும், அதைத் தடுக்காதீர்கள். ஒரு பொருளைப் பிறருக்குக் கொடுப்பதை தடுப்பது பெரிய பாவம். அந்தப் பாவத்தை நீங்கள் செய்யாதீர்கள்,'' என்றார்.
பிறகு அவர் கோடீஸ்வரரைப் பார்த்து, "நீங்கள் தான தர்மங்கள் செய்யுங்கள். அதை நிறுத்தாதீர்கள்,'' என்றார்.
அவரும் தம் மனம்போல் அனைவருக்கும் அள்ளி அள்ளி வழங்கினார். கோடீஸ்வரரை ஏமாற்றி, அவருடைய சொத்துக்களை அபகரித்து விடலாம் என்று நினைத்த அவருடைய உறவினர்கள் இறுதியில் ஏமாற்றம் அடைந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.