பிரதமர் மோடியின் பிஏ பட்டம் குறித்து தகவலை அளிக்க டெல்லி பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது.
டெல்லி பல்கலைக்கழக்தில் 1978ம் ஆண்டு அஞ்சல் வழியாக படித்து பிஏ அரசியல்அறிவியல் பட்டம் பெற்றதாக பிரதமர் மோடி தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் ஜெயின் என்பவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978ம் ஆண்டு நரேந்திர மோடி என்ற பெயரில் எத்தனை பெயர் படித்தனர். என்பது குறித்து தகவலை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழக முதன்மை தகவல் தொடர்பு அதிகாரி ஸ்ரீதர் ஆச்சர்யலு கூறுகையில், பட்டம் பெற்றவர்களின் பதிவுஎண் அடிப்படையில் தான் நாங்கள் தகவலை தரமுடியும், அவர்களின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பைலாக கைகளால் தேடி எடுப்பது சாத்தியமில்லை. 1978ம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களில் நிறைய பேரின் பெயர்கள் M (Modi) & N (Narendra) என்ற எழுத்தில் உள்ளது என்றார்.
இதேபோல் மோடியின் எம்ஏ பட்டம் குறித்து தகவலை அளிக்க குஜராத் பல்கலைக்கழகமும் முன்பு மறுத்திருந்தது. அந்த பல்கலைக்கழகம் இதுபற்றி அளித்த விளக்கத்தில் ஒருவருடைய மதிப்பெண் சான்றிதழ் மற்றும் அவரை பற்றிய தகவல்கள் தனிப்பட்டவையாகும் எனவே அந்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்க முடியாது என்று தெரிவித்திருந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.