Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2016

கேரட் பாதாம் கீர்


தேவையான பொருள்கள் :

பால் - 3 கப்
சர்க்கரை - முக்கால் கப்
கேரட் - 2 (அ) 3 பாதாம் பவுடர் - 2 மேசைக்கரண்டி
குங்குமப்பூ - 2 இதழ்

செய்முறை :

* கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

* பாலைக் காய்ச்சி வைக்கவும்.

* காய்ச்சிய பாலில் ஒரு கப் பாலை எடுத்து பாதாம் பவுடர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.

* வேகவைத்த கேரட் ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* மீதமுள்ள காய்ச்சிய பாலில் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிபிடிக்காமல் கொதிக்க வைக்கவும்.

* அதனுடன் சர்க்கரையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலக்கவும்.

* பிறகு பாதாம் பவுடர் சேர்த்து கரைத்து வைத்திருக்கும் பாலைச் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்

* சுவையான கேரட் பாதாம் கீர் தயார். குங்குமப் பூவை தூவி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.