Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 26, 2016

சத்தான கோதுமை ரவை கிச்சடி செய்வது எப்படி


தேவையான பொருட்கள் :

கோதுமை ரவா - 1 கப் (சம்பா கோதுமை)
தண்ணீர் - 5 கப்
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1 சிறிதாக
பச்சை மிளகாய்   -  1
இஞ்சி  - 1 துண்டு
பூண்டு பல் -  2 சிறிதாக
காய்கள் கலவை  - கேரட், பீன்ஸ், பட்டானி, துருவிய கோஸ் 1 கப் (விரும்பினால்)

தாளிக்க :

கடுகு - 2 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு   - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை   - 1 கொத்து
கொத்தமல்லித்தழை  - சிறிதளவு நறுக்கியது
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு   - தேவைக்கேற்ப.

செய்முறை :

* ரவையில் சிறிது எண்ணெய் ஊற்றி வாசம் வரும் வரை வறுக்கவும்.

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், வெங்காயம் போட்டு வதக்கவும்.

* பின்னர் இஞ்சி, தக்காளி சேர்த்து சிறிது வதக்கிய பின், காய்கறிகளையும் சேர்த்து வதக்கிய பின் உப்பு சேர்த்து மூடியிட்டு வேகவிடவும். காய்கறி பாதி வெந்ததும், தண்ணீரை அளந்து ஊற்றவும்(1 கப்புக்கு 5 கப்).

* தண்ணீர் கொதிவந்ததும் வறுத்து வைத்த ரவையை சேர்த்து கட்டி சேராமல் கிளறி மூடியிட்டு வேகவிடவும்.

* ரவை நன்கு வெந்ததும் சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.

* தேங்காய் சட்டினி, தக்காளி சட்டினி, சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.