Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 3, 2016

தண்ணீர் பஞ்சம்: ஐ.பி.எல். போட்டியை நடத்த பா.ஜனதா எதிர்ப்பு!


மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மராத்வாடா மற்றும் விதர்பா பிராந்தியங்களில் கடும் வறட்சியால் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், மும்பை உள்ளிட்ட அம்மாநிலத்தின் பிற பகுதிகளில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஒன்பதாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா மும்பையில் வருகிற 8– ம் தேதி நடைபெறுகிறது. போட்டித் தொடர் மார்ச் 9–ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடக்கிறது. 9–ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை, புனே அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் மும்பை, புனே, நாக்பூர் நகரில் மட்டும் 19 போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டி நடைபெறும் மைதானங்களை தயார்படுத்த சுமார் 65 முதல் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்நிலையில், மகாராஷ்ட்ரா மாநிலம் கடந்த ஆண்டு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மாநிலத்தில் நடத்தக்கூடாது என அம்மாநில பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஷாங்க் மனோகருக்கு மாநில பா.ஜனதா தலைவர் விவேகானந்தா குப்தா எழுதியுள்ள கடிதத்தில், "மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மராத்வாடா மற்றும் விதர்பா பிராந்தியங்களில் கடந்த இரண்டாண்டு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவி வருவதை நீங்கள் அறிவீர்கள். இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து 90 லட்சம் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாநிலத்தின் மும்பை, புனே, நாக்பூர் நகரங்களில் நடத்தப்படவுள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்காக ஒவ்வொரு முறையும் மைதானத்தை செப்பனிட்டு, செம்மைப்படுத்த சுமார் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும்.வாரத்தில் மூன்றுமுறை இதைப்போல் செம்மைப்படுத்த சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

இவ்வகையில், 19 போட்டிகளுக்காகவும் மைதானங்களை தயார்படுத்த சுமார் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஒட்டுமொத்த மாநிலமும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 70 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்து இங்கு ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவது அறிவார்ந்த செயலாக அமையாது.

நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நீங்கள் கருணைகாட்ட வேண்டிய இந்த தருணத்தில், ஐ.பி.எல். போட்டிகளை மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடத்தும் முடிவை கைவிட்டு, வேறொரு இடத்தில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக்கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.