சோலையில் மயிலானது நீண்ட நேரமாக நடனமாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்தப் பக்கமாக குரங்கு வந்தது.
சோலையில் நன்கு அடர்ந்து வளர்ந்திருந்த பூச்செடிகளின் அருகே நின்றபடி மயிலின் நடனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது குரங்கு.
ஒரு குரங்கானது நீண்ட நேரமாக தன்னுடைய நடனத்தையே ரசித்துக் கொண்டிருப்பதை மயில் கவனித்தது. குரங்கைப் பார்க்கிற வேளையில் மயிலுக்கு ஆத்திரமே ஏற்பட்டது.
"நம் நடனத்தை ரசிப் பதற்கு குரங்கிற்கு எந்தத் தகுதியும் இல்லை. அப்படி யிருக்கையில் இந்தக் குரங்கானது நம்முடைய நடனத்தை ரசித்துக் கொண்டிருக்கிறதே! உடனடியாக குரங்கை இந்தச் சோலையை விட்டே விரட்ட வேண்டும்' என்று முடிவு செய்தது. வேகமாக குரங்கின் அருகில் பறந்து வந்தது மயில்.
""குரங்கே, நீண்ட நேரமாக என்னுடைய நடனத்தை நீ ரசித்துக் கொண்டிருக்கிறாய்? நடனத்தைப் பற்றி உனக்கென்ன தெரியும்? மரியாதையாக இங்கிருந்து சென்றுவிடு. இனிமேல் நான் நடனம் ஆடுகின்ற நேரத்தில் நீ இந்தச் சோலைக்குள் வந்து விடாதே,'' என்றது மயில்.
மயிலின் பேச்சுக்கு பதில் எதுவும் தெரிவிக்காமல் அமைதியுடன் சென்றது குரங்கு. அதே நேரத்தில் எப்படியாவது இந்த மயிலின் ஆணவத்தை அடக்க வேண்டுமென்று முடிவு செய்தது.
உடனே அந்தக் குரங்கானது ஒரு கழுகை சந்திக்கச் சென்றது. கழுகு இன் முகத்துடன் குரங்கை வரவேற்றது.
""குரங்கே, நீ எதற்காக இங்கே வந்திருக் கிறாய்? என்னால் உனக்கு ஏதேனும் உதவி கள் ஆக வேண்டுமா?'' என்று கேட்டது கழுகு.
""கழுகே, சற்று அருகே இருக்கின்ற சோலை ஒன்றில் மயிலானது வசித்து வருகிறது. நான் ஒருநாள் அந்த மயிலின் நடனத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந் தேன். ஆனால், அந்த மயிலோ அதன் நடனத்தை ரசித்துப் பார்க்க தனக்கு எந்தத் தகுதியும் இல்லையென்று கேலி செய்தது. என்னை அந்த சோலையை விட்டே விரட்டி யடித்தது,'' என்றது குரங்கு.
""அப்படியா செய்தி? அந்த மயில் கர்வம் பிடித்ததாக இருக்கிறதே? அந்த மயிலின் கர்வத்தை அடக்க ஏதாவது ஒன்று செய்தாக வேண்டும்,'' என்று கூறியது கழுகு.
""ஆமாம் கழுகே. நானும் அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீயும் சரியாகச் சொல்லிவிட்டாய். அந்த மயிலின் கர்வத்தை அடக்க எனக்கொரு யோசனை தோன்றுகிறது. நீ மட்டும் சரியாக ஒத்துழைப்பு கொடுத்தாயானால் நான் எளிதாக மயிலின் கர்வத்தை அடக்கி விடுவேன்,'' என்றது குரங்கு.
""அதெப்படி உன்னால் அவ்வாறு செய்ய முடியும்?'' என்று கேட்டது கழுகு.
உடனே குரங்கானது கழுகின் காதின் அருகில் சென்று, ஏதோ ரகசியமாகத் தெரிவித்தது.
""சபாஷ் குரங்கே, நீ நல்லதொரு யோசனையை வழங்கினாய். அதனைக் கேட்கையில் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. உன் விருப்பப்படியே நான் செய்கிறேன்,'' என்றது கழுகு.
ஓரிரு நாட்களில் பறவைகள் எல்லாம் ஒன்று கூடியபடி அந்தச் சோலையில் மாநாட்டை நடத்தின. அந்த மாநாட்டிற்கு எல்லாப் பறவைகளும் ஒன்று கூடின.
மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சியாக பறவை களின் நடனப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
அந்த நடனப் போட்டியில் ஏராளமான பறவைகள் கலந்து கொண்டன. மயிலும் தவறாமல் நடனப் போட்டியில் கலந்து கொண்டு தனது நடனத்தைச் சிறப்பாக நடத்திக் காட்டியது.
எல்லாப் பறவைகளும் மயிலுக்கே பரிசு கிடைக்கப் போகிறது என்று கூறிக் கொண்டன.
அந்த நேரத்தில் தலைவர் பறவையான கழுகு, மேடையின் முன்னால் வந்து நின்றது.
""நண்பர்களே, இப்போது விசித்திரமான பறவையொன்று உங்கள் முன்னால் நடனம் ஆடப்போகிறது. நம் இனத்தில் அப்படி ஒருவரை நீங்கள் இதுவரையிலும் பார்த் திருக்க மாட்டீர்கள். இதோ இப்போதே அந்த விசித்திரப் பறவையின் நடனம் நடைபெறப் போகிறது,'' என்றது கழுகு.
உடனே அந்த மேடையில் விசித்திரப் பறவை வந்து நின்றது. அது தன் இருபுறமும் நீண்ட இறக்கையுடன், உடல் முழுக்க பச்சை இலைகளுடன் உடலே வெளியே தெரியாத படி காட்சியளித்தது. அதன் இறக்கைகள் இரண்டும் தென்னங்கீற்றுகளால் ஆனதாக பச்சிலைகள் சுற்றியபடி காணப்பட்டன.
அந்தப் பறவையானது விசித்திரமான நடனத்தை ஆடியது. மற்ற பறவைகள் எல்லாம் வியப்போடும், ஆச்சரியத்தோடும் அந்த நடனத்தைக் கண்டுகளித்தன.
இதுவரையிலும் நாம் இப்படியொரு நடனத்தைக் கண்டதில்லையே. நிச்சயமாக இந்த நடனப் போட்டியில் மயிலுக்குப் பரிசு கிடைக்காது. இந்த விசித்திரப் பறவைக்குத் தான் பரிசு கிடைக்கும் என்று தங்களுக்குள் கூறிக் கொண்டன.
சிறிது நேரத்தில் அந்த விசித்திரப் பறவையின் நடனம் முடிந்தது. எல்லாப் பறவைகளும் விசித்திரப் பறவையின் நடனத்தைப் பாராட்டின.
போட்டியில் விசித்திரப் பறவையே வெற்றி பெற்றது.
கழுகு விசித்திரப் பறவைக்கு பரிசினைக் கொடுத்தது.
பரிசை வாங்கிக்கொண்ட விசித்திரப் பறவை தன் உடலில் காணப்பட்ட பச்சிலைகளையும், உடலை ஒட்டியுள்ள இறக்கைகளையும் அப்புறப்படுத்தியது. பின்னர் குரங்காக காட்சியளித்தபடி நின்று கொண்டிருந்தது.
குரங்கைக் கண்டு கழுகு மட்டும் சிரித்தபடி நின்றது. மற்ற பறவைகள் எழுந்து வியப்போடு, குரங்கை நோக்கின.
உடனே குரங்கானது. ""பறவை நண்பர்களே, நான் மயிலின் ஆணவத்தை அடக்க வேண்டி, உங்க ளில் ஒருவனாக வேடமிட்டு உங்கள் முன்னால் முக்கியமாக, மயிலின் முன்னால் நடனம் ஆடி பரிசை வாங்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிட முயற்சித்தேன். அதில் நான் வெற்றியும் பெற்றேன். இதற்கு நான் கழுகிற்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், மயிலின் ஆணவத்தை அடக்கும் முயற்சியில் கழுகுதான் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது,'' என்றது.
அதனைக் கேட்ட மயிலோ தலை கவிழ்ந்தபடியே மேடையில் ஏறியது.
""நண்பர்களே, என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு மட்டும்தான் சிறப்பாக நடனம் ஆடத் தெரியுமென்று இதுவரையிலும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனை இன்றோடு கை விட்டு விட்டேன். இந்த குரங்கு எனக்கு நல்ல பாடத்தை கற்பித்து விட்டது'' என்றது மயில்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.