Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் ரக போர்விமானங்களை வாங்க இலங்கை, எகிப்து நாடுகள் ஆர்வம்


முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜாஸை வாங்க இலங்கை எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி உள்ளன.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிகவும் எடை குறைந்த ‘தேஜாஸ்’ என்ற போர் விமானத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்து உள்ளது. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  தயாரிக்கப்பட்ட இந்த தேஜாஸ் போர் விமானம், உலகின் மிகவும் எடை குறைந்த போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய விமானப்படையில் கடந்த ஆண்டு இந்த போர் விமானம் முறைப்படி சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், தேஜாஸ் போர் விமானங்களின் ஆற்றலை கண்டு வியந்த இலங்கை, எகிப்து ஆகிய நாடுகள் விமானங்களை இந்தியாவிடம் வாங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த ஜேஎப் -17 என்ற போர் விமானத்தை இலங்கைக்கு விற்க பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால், பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை இலங்கை நிராகரித்தது. அதேவேளையில் இந்தியாவிடம் தேஜாஸ் போர் விமானத்தை வாங்க தயாராகியுள்ளது. அதேபோல், எகிப்தும் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த தேஜாஸ் போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வகை விமானம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. ஆனாலும், நடப்பில் உள்ள போர் விமானத்தை வாங்கவே இரு நாடுகளும் விரும்புவதாக தெரிகிறது.

இருப்பினும், தேஜாஸ் போர் விமானத்தை தயாரித்து வரும் மத்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோனெட்டிக்கல் லிமிடெடு நிறுவனம், இந்திய விமானப்படைக்கு தேஜாஸ் விமானத்தை வழங்குவதற்கே முன்னுரிமை அளிக்கிறது.  தேஜாஸ் போர் விமானத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள நாடுகளின் விவரத்தை பகிர்ந்து கொள்ள மறுத்த  எச்.ஏ.எல் நிறுவன  தலைவர் சுவர்னா ராஜூ,  பிற நாடுகள் தேஜாஸ் விமானத்தை வாங்க விருப்பம் தெரிவித்தாலும், எங்களின் முதல் முன்னுரிமை நமது நாட்டிற்கே என்று  தெரிவித்தார். இருப்பினும், இலங்கை மற்றும் எகிப்து நாடுகள் இந்த போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டுவது பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. அண்மையில், பஹ்ரைன் நாட்டில் நடந்த சர்வதேச விமான கண்காட்சியில் தேஜாஸ் கலந்து கொண்டதையடுத்து, வெளிநாடுகள் இந்த விமானத்தை விசாரித்தது  தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.