Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 2, 2016

அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக்கு பெற்றோர்கள் வரவேற்பு


தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக்கு பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் 


 கோவை கணபதி, சரவணம்பட்டி பகுதியில் சுமார் 20–க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்சி., மெட்ரிக் போன்ற தனியார் பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம், பள்ளி கட்டிட நிதி, அறக்கட்டளை நிதி என தனித்தனியாக வசூலிக்கின்றனர். இதனால் அரசு பள்ளியில் உள்ள ஆங்கிலவழி கல்விக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிக கட்டணம் 


 பிரி–கேஜி வகுப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு வருடத்திற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. வகுப்புகள் அதிகரிக்கும் போது கட்டணமும் ரூ.10 ஆயிரம் அதிகரித்து விடுகிறது. இதனால் நடுத்தர குடும்பத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கட்டணத்தை செலுத்த முடியவில்லை. கூடுதல் வகுப்புகளுக்காக தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து பள்ளிக்கும், பயிற்சியாளருக்கும் என கட்டணங்களை தனித்தனியாக வசூலிக்கின்றனர்.

மேலும் பள்ளியில் எந்த ஒரு நிகழ்ச்சி, விழா, சுற்றுலா, அறிவியல் கண்காட்சி, போட்டிகள் நடந்தால் அதற்கு அதிக கட்டணம் என வசூல் மழையில் தனியார் பள்ளி நிறுவனம் இயங்குகிறது.

அரசு பள்ளிகள் 

தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தியதற்கு ரசீதுகள் எதுவும் தரப்படவில்லை. வசதி படைத்தவர்கள் பள்ளிகளில் கேட்கும் கட்டணத்தை செலுத்தி விடுகின்றனர். அவர்கள் தாங்கள் அலுவலகத்திலிருந்து வரும் வரை குழந்தைகளை பள்ளியிலேயே பராமரிப்பதற்கு தனியாக கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால் நடுத்தர மக்களால் தனியார் பள்ளிகளில் கேட்கும் கட்டணத்தை செலுத்த முடியாமல் தற்போது அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி முறை தொடங்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவர்கள் எப்படியாவது தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.

பெற்றோர்கள் வரவேற்பு 

எஸ்.எஸ்.குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 3–ம் வகுப்பு வரை ஆங்கிலவழி கல்வி உள்ளது. இங்கு தொடக்கத்தில் 44 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது 68 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கலாமணி கூறியதாவது, சரவணம்பட்டி பகுதியில் தனியார் இண்டர்நேசனல், சி.பி.எஸ்.சி., மெட்ரிக் பள்ளிகள் அதிகம் உள்ளன. தனியார் பள்ளிகளை தாண்டி அரசுப்பள்ளிகளில் உள்ள ஆங்கிலவழி கல்வி முறைக்கு அதிக மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. 

இதற்கு காரணம் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கூட வசூலிப்பது இல்லை. மேலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை ஆகியவை வழங்கப்படுகிறது. இது அனைத்து தர மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போன்று சரவணம்பட்டி ஷாஜஹான் நகர் அரசுப்பள்ளியில் தற்போது 115 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதே போன்று காளப்பட்டி, விளாங்குறிச்சி, சிவானந்தபுரம், கோவில்பாளையம் மேலும் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்திற்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக்கு பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.