குன்றத்தூர் அருகே தாய்–மகளின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆசிரியை
சென்னையை அடுத்த குன்றத்தூர் இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. ஏமன் நாட்டில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி (வயது 32). இவர் கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆகும்.
இவர்களுக்கு 7 வயதில் சுரபிஸ்ரீ என்ற மகளும், குணஸ்ரீ என்ற 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். ஏமன் நாட்டில் ராமசாமி தங்கி வேலை செய்து வருவதால் தேன்மொழியுடன் அவருடைய தாய் வசந்தா (64) வசித்து வந்தார்.
கழுத்து அறுபட்ட சிறுமி
நேற்று காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து சுரபிஸ்ரீ கழுத்து அறுபட்ட நிலையில் தன்னுடைய தங்கை குணஸ்ரீயை தூக்கிக்கொண்டு அழுதபடி தெருவுக்கு ஓடிவந்தாள். அப்பகுதியில் யாரும் இல்லாததால் அங்கும், இங்கும் உதவி கேட்டு ஓடினாள். பின்னர் அதே தெருவில் உள்ள கன்னியப்பன் என்பவர் வீட்டுக்கு சுரபிஸ்ரீ, தங்கையுடன் சென்றாள்.
வீட்டில் இருந்தவர்கள் சுரபிஸ்ரீயை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவளிடம் அவர்கள் விசாரித்தனர். அப்போது அம்மாவும், பாட்டியும் வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக சுரபிஸ்ரீ அழுதுகொண்டே கூறினாள்.
இரட்டை கொலை
இதையடுத்து காயத்துடன் இருந்த சிறுமியை வீட்டில் இருந்த சிலர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சுரபிஸ்ரீ வீட்டுக்கு கன்னியப்பன் சென்று பார்த்தபோது வசந்தாவும், தேன்மொழியும் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தனர். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு கன்னியப்பன் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் பிராங்டி ரூபன், புருஷோத்தமன், அன்புக்கரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர். வசந்தா, தேன்மொழி ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரவில் நடந்த சம்பவம்
இதுபற்றி அறிந்த இணை கமிஷனர் சந்தோஷ்குமார், துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்துக்கொண்டு அருகில் உள்ள மற்றொரு தெரு வரை மோப்ப நாய் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்தவர்களின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும், ரத்தம் உறைந்து கிடந்ததாலும் இந்த கொலை சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7 மணி அல்லது 9 மணிக்குள் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெண் பிடிபட்டார்
இதையடுத்து உயிர் பிழைத்த சிறுமி சுரபிஸ்ரீயிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது வீட்டு வேலைக்கு வரும் சத்தியாவுடன், 2 பேர் வந்ததாக சிறுமி கூறினாள். சிறுமி அளித்த தகவலின் பேரில் பல்லாவரத்தை அடுத்த நாகல்கேனியை சேர்ந்த சத்தியா என்ற பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:–
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த கனமழையால் வசந்தா, தேன்மொழி தங்கியிருந்த குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீட்டுக்குள் மழைநீர் புகுந்து சேரும், சகதியுமாக இருந்ததால் வீட்டை சுத்தம் செய்ய ஒரு பெண் தேவை என உறவினர்களிடம் வசந்தா கூறியுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் சத்தியாவை அனுப்பி வைத்தனர்.
சதித்திட்டம் தீட்டினர்
தேன்மொழி வீட்டிற்கு வந்த சத்தியா சில நாட்கள் தங்கி வீட்டை சுத்தம் செய்து கொடுத்துள்ளார். பின்னர் தேவைப்படும்போதெல்லாம் வீட்டு வேலைக்கு சத்தியாவை இவர்கள் அழைத்துள்ளனர். அப்போது இவர்கள் வசதியானவர்கள் என்றும், வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாததாலும் நகை, பணத்தை கொள்ளையடிக்க சத்தியா முடிவு செய்தார்.
இது குறித்து தனக்கு நெருக்கமான ஜெயக்குமார், தவுலத்பேகம் ஆகியோரிடம் சத்தியா கூறியுள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்களை கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடிக்க அவர்கள் சதித்திட்டம் தீட்டினர்.
கழுத்தை அறுத்தனர்
அதன்படி நேற்று முன்தினம் மாலை சத்தியா, தவுலத்பேகம் ஆகியோர் வசந்தா வீட்டிற்கு வந்தனர். சிறிது நேரத்தில், வெளியே நின்று கொண்டிருந்த ஜெயக்குமாரை உள்ளே வருமாறு சைகையால் சத்தியா அழைத்துள்ளார்.
வீட்டுக்குள் வேகமாக வந்த ஜெயக்குமார் முதலில் வசந்தாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு மாடியில் இருந்த தேன்மொழி கீழே இறங்கி வந்தார். அப்போது அவரையும் கொடூரமாக கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
நகை, பணத்துடன் ஓட்டம்
அதை தொடர்ந்து சுரபிஸ்ரீயின் கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணம் எங்கு உள்ளது என்று அவர்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். சிறுமியை விட்டு விட்டால் தங்களை காட்டி கொடுத்து விடுவாள் என நினைத்து சுரபிஸ்ரீயின் கழுத்தையும் அறுத்துள்ளனர். இதில் சிறுமி மயங்கி விழுந்தாள். 9 மாத குழந்தையால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது என நினைத்து அதை மட்டும் எதுவும் செய்யாமல் விட்டு விட்டனர்.
பின்னர் பீரோவில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவைகளை அள்ளிக்கொண்டனர். சிறுமி இறந்து விட்டதாக நினைத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மயங்கி கிடந்த சிறுமி காலையில் எழுந்து பார்த்த போது அம்மாவும், பாட்டியும் இறந்து கிடந்ததால் பீதியடைந்து தன்னுடைய தங்கையை தூக்கிக்கொண்டு கன்னியப்பன் வீட்டுக்கு சென்றது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் ஒரு பெண் சிக்கினார்
பின்னர் சத்தியா கொடுத்த தகவலின் பேரில் தவுலத்பேகத்தை போலீசார் பிடித்தனர். தலைமறைவான ஜெயக்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் தான் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் எவ்வளவு என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனைவியும், மாமியாரும் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த ராமசாமி உடனடியாக நேற்று காலை ஏமனில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தார். அவரிடம் இருவரின் உடல்களையும் போலீசார் ஒப்படைத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.