Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 2, 2016

இந்தியர்கள் யாரும் ஏமன் நாட்டிற்கு எக்காரணத்தை கொண்டும் பயணம் செய்ய வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்


போர் பதற்றம் நிலவி வரும் ஏமன் நாட்டிற்கு இந்தியர்கள் யாரும் எந்த சூழ்நிலையிலும், எந்த வகையிலும், எந்த நோக்கத்திற்காகவும் பயணிக்க வேண்டாம் என்று மத்திய அரசு மிகவும் கண்டிப்பாக அறிவுருத்தியுள்ளது.

கடந்த 4-ம் தேதி ஏமனில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் கன்னியாஸ்திரிகள். மிசனரிஸ் ஆஃப் சேரிட்டி சபையைச் சேர்ந்த அந்த நால்வரில் ஒருவர் இந்தியர் ஆவார்.

அதேபோல், கேரளாவை சேர்ந்த பாதிரியார் டாம் உழுநலில் என்பவர் கடந்த 4-ம் தேதியன்று ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். டாம் உழுநலிலை தீவிரவாதிகள் சிலுவலையில் அறைந்து கொன்றதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ஏமன் நாட்டில் தற்போதுள்ள பாதுகாற்ற சூழலில் இந்தியர்கள் யாரும் அந்நாட்டிற்கு பயணம் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய வெளியுறத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏமன் நாட்டில் தற்போது தீவிரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பு இல்லை. மேலும் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

அண்மையில் ஏடன் நகரில் இந்தியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. எனவே அடுத்த அறிவிப்பு வரும்வரை, எத்தகைய சூழலிலும், எந்த காரணங்களுக்காகவும் ஏமன் நாட்டுக்கு இந்தியர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்" என அறிவுறுத்தப்படுகிறது எனக் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.