ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், கொரப்பாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பென்னய்யா (வயது 32). இவர் கல்குவாரியில் வேலை செய்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கல் குவாரியில் நடந்த விபத்தில் பென்னைய்யா தனது ஒரு காலை இழந்தார்.
வருமானம் இல்லாததால் சொந்த ஊரில் இருந்து கேரளா வந்த பென்னய்யா திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பகுதியில் பிச்சை எடுத்து குடும்பம் நடத்தி வந்தார். அந்த பணத்தின் ஒரு பகுதியை லாட்டரி சீட்டு வாங்குவதற்காக செலவழித்து வந்தார்.
இந்தநிலையில், அவர் வாங்கிய அக்ஷயா லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசான ரூ.65 லட்சம் கிடைத்தது. வீடு இல்லாததால் தெருவில் வசித்து வந்த அவரை உடனடியாக போலீசார் நேரில் வந்து சந்தித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
கேரளாவில் அவருக்கு வங்கியில் கணக்கு இல்லாததால், அவருக்கு ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு லாட்டரி பணத்தை டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார். இதுகுறித்து, பென்னய்யா கூறும்போது, இந்த பரிசு தொகையினை பயன்படுத்தி சொந்த ஊரில் சொந்தமாக ஒரு கடை வைத்து நடத்தப்போகிறேன் என்று கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.