அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்திய மாணவர்
அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற ருத்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று, நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரில் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் 12 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷனி பட்டேல் (வயது 21) என்ற மாணவர், பொருளாதார பட்டப்படிப்பு படித்து வந்தார்.
பல்கலைக்கழக வளாகத்தின் அருகே அமைந்துள்ள சென்ட்ரல் அவினியூ அடுக்குமாடி குடியிருப்பில் அவர் வசித்து வந்தார். அவருடன் மற்றொரு மாணவரும் தங்கி வந்தார்.
சுட்டுக்கொலை
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு ஷனி பட்டேலும், அவரது சக மாணவரும் அறையில் இருந்தபோது, சுமார் 20 வயதுக்கு மேற்பட்ட 2 வாலிபர்கள் அங்கு சென்றனர். அவர்கள் ஷனி பட்டேலையும், அவரது நண்பரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டு அங்கிருந்து தப்பினர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஷனி பட்டேல் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவருடன் தங்கி இருந்த சக மாணவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம், ருத்கர்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் அதிபராக வர விரும்பியவர்
ஷனி பட்டேல் ஏற்கனவே டாம்ஸ் ரிவர் என்ற இடத்தில் போதைப்பொருள் வைத்திருந்ததாக ஒரு வழக்கில் சிக்கி, நன்னடத்தை சட்டத்தின்கீழ் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஷனி பட்டேல் கொலை குறித்து அவருடைய வக்கீல் பிராட்லி பில்ஹிமர் கூறும்போது, ‘‘இப்படி ஒரு முடிவு, ஷனி பட்டேலுக்கு நேர்ந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் பொருளாதாரம் படித்து வந்ததுடன், எதிர்காலத்தில் ஒரு தொழில் அதிபராக உருவாக வேண்டும் என்று கனவு கண்டிருந்தார். எப்போதும் அவர் சொந்தமாக தொழில் தொடங்குவதுபற்றியே பேசி வந்தார். அழகான வாலிபர். அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு விட்டார்’’ என்றார்.
ஷனி பட்டேல் படுகொலை செய்யப்பட்டதின் பின்னணி என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை தேடும் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
வேந்தர் அதிர்ச்சி
ஷனி பட்டேல் படுகொலைக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் நான்சி கேண்டர் அதிர்ச்சியும், துயரமும் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘ஷனி பட்டேல் படுகொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடக்கிறது. அவரது மரணம், எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார்.
ருத்கர்ஸ் போலீஸ் துறை, ‘‘ஷனி பட்டேல் படுகொலை, எந்தவொரு ஒரு நோக்கமும் இன்றி நடத்தப்பட்டது அல்ல. பல்கலைக்கழக வளாகத்துக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இருந்ததில்லை’’ என கூறுகிறது.
அமெரிக்காவில் குறிப்பாக பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் படித்து வருகிற மாணவர்களை குறி வைத்து நடத்தப்படுகிற துப்பாக்கிச்சூடுகள் பெருகி வருவது, பெற்றோருக்கு மிகுந்த கவலையை அளிப்பதாக அமைந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.