திருச்சியில் கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை ஒரு ஆணவக் கொலை என்ற அமைச்சர் வளர்மதியின் பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் நிகழ்ந்த இன்னுமொரு அரசியல் கொலையாக பதிவானது ராமஜெயம் கொலை வழக்கு. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியில் செல்வாக்கு மிகுந்தவராகவும் வலம் வந்த ராமஜெயம், காலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தி, சயனைடு கொடுத்து கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். மிக தெளிவாக திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த படுகொலையில் இதுவரை யார் குற்றவாளி என்பதை கண்டறிய போலீசாரால் முடியவில்லை. இன்னமும் திணறிவருகின்றனர். முன்பகைதான் காரணம், தொழிற்போட்டி காரணமாக இருக்கலாம் என காரணங்கள் யூகங்களாக மாறிக்கொண்டே வருகிறது.
ஆனால் இதுவரை உண்மையான காரணம் என்னவென்பதும், உண்மையான குற்றவாளி யார் என்பதும் கண்டறியப்படவில்லை. இன்னும் கண்டறிய முடியவில்லையா? கண்டுபிடிக்க விருப்பமில்லையா என வெளிப்படையாகவே அரசியல் கட்சிகள் விமர்சிக்கத்துவங்கியுள்ளன.
ஆனால் இதுவரை உண்மையான காரணம் என்னவென்பதும், உண்மையான குற்றவாளி யார் என்பதும் கண்டறியப்படவில்லை. இன்னும் கண்டறிய முடியவில்லையா? கண்டுபிடிக்க விருப்பமில்லையா என வெளிப்படையாகவே அரசியல் கட்சிகள் விமர்சிக்கத்துவங்கியுள்ளன.
இந்நிலையில் ராமஜெயத்தின் 4-ம் ஆண்டு நினைவு நாள் அன்று திருச்சி உறையூரில் தேமுதிக தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இந்த நாளில்தான் நான்கு வருடங்களுக்கு முன் திருச்சியில் வெட்டிக்கொல்லப்பட்டார் முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம். ஆனால் அந்த கொலைக்கான காரணத்தை இன்றும் கண்டறிய முடியவில்லை," என ஆவேசமாக பேசினார்.
இந்நிலையில் தேமுதிக கூட்டம் நடந்த அதே உறையூரில் அதிமுகவின் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு பேசினார்.
அந்த கொலை (ராமஜெயம் கொலை) எதற்காக நடந்தது தெரியுமா? அது ஒரு ஆணவக்கொலை. அம்மா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததா?" என வளர்மதி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமஜெயம் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதும், கொலையாளி யார் என்பதும் கடந்த 4 ஆண்டுகளாக தெரியாத நிலையில், ராமஜெயம் கொலை, ஒரு ஆணவக்கொலை என்ற ரீதியில் அமைச்சர் ஒருவரே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மறக்காமல் உளவுத்துறையினர் இதை குறிப்பெடுத்துக்கொண்டனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.