ரஷ்யாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் ரஷ்ய வீரர் செர்கை கர்ஜாகின் சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட அவர் தகுதிபெற்றார்.
14-வது மற்றும் கடைசி சுற்றில், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருணா-வை, கர்ஜாகின் தோற்கடித்தார். இதையடுத்து எட்டரை புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த அவர், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
வரும் நவம்பர் மாதம் நியுயார்க்கில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வே கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்லசனை எதிர்த்து கர்ஜாகின் விளையாடவுள்ளார்.
5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், கடைசிச்சுற்றில் ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் பீட்டர் சுவிட்லர்-ருடன் டிரா செய்தார். இதையடுத்து ஏழரை புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்த ஆனந்த், உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார்.
கடந்த பத்தாண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆனந்த் தகுதிபெறாமல் இருப்பது இதுவே முதன்முறையாகும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.