உனக்கு நிறைய
கேள்விகள் இருந்தன
நிறைய சமாளிப்புகள்
நிறைய குற்றச்சாட்டுகள்
நிறைய கோபங்கள்
நீ கையசைத்துப்போகும்போது
என்னிடம் ஒரு காதல் இருந்தது
கொஞ்சம் தேநீர் இருந்தது
நிறைய மழை இருந்தது
-லதாமகன்
ஒவ்வொரு ப்ரேக் அப்க்கு பின்னாலும் ஒரு நாவலே இருக்கிறது என சொல்லலாம். காதல் என்பதே இரண்டு பேர் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கையும், பரஸ்பர மரியாதையும்தானே? அந்த இருவர் எதோ ஒரு காரணத்தினால் பிரியும் போது, நம்பிக்கை கூட இல்லாமல் போகலாம். ஆனால், மரியாதை இருக்க வேண்டும். இளமையின் கிளைகளில் பூக்கும் அந்த காதல் ஒரு சந்தர்ப்பத்தில் உதிரும் போது, மறுபடியும் அதை தேடி போய் தொல்லை செய்யாமல் இருப்பதும், அந்த உறவுக்கும் நபருக்கும் மரியாதை கொடுப்பதும்தான் அந்தக் காதலுக்கு நாம் செய்யும் குறைந்தபட்ச நன்றியாக இருக்க முடியும். அதைத்தான் விராட் கோலி செய்திருக்கிறார்.

கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் காதலித்தார்கள் என்பதை எப்போதும் மறைத்ததில்லை. வெளிப்படையாக பலமுறை சொல்லி இருக்கிறார். அனுஷ்காவை கோலி எந்த அளவுக்கு விரும்பினார் என்பதையும் ட்விட்டரில் சொல்லியிருக்கிறார். கோலி ஒரு அக்ரசிவ் ஆசாமி. அவர் அன்பும் அப்படித்தான் இருக்கும். போலவே, இருவரும் சில காரணங்களால் பிரிந்து விட்டார்கள் என்பதையும் கோலியேதான் சொன்னார். அந்த பிரேக் அப்க்கு பிறகு கோலி, அனுஷ்காவை பற்றி எதுவும் பேசவில்லை. இதே இந்தியாவில்தான் ஹ்ரித்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும் பிரேக் அப்பிற்கு பிறகு சண்டை போட்டு, கிண்டலான ட்வீட்ஸ் எழுதி, இப்போது நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள்.
ஆனால், கோலி சமீபத்தில் அனுஷ்காவை கிண்டல் செய்து வந்த மீம்ஸ்க்கு பதில் சொல்லும் போது, "அனுஷ்கா எனக்கு நல்லதை மட்டுமே செய்திருக்கிறார். அவரை தொல்லை பண்ணாதீங்க” என கொஞ்சம் கோபமாகவே சொல்லி இருக்கிறார். அந்த கோபத்தில் தெரிவதெல்லாம் அவர் அந்தக் காதலின் மீதும், அனுஷ்கா மீதும் வைத்திருக்கும் மரியாதைதான். அதுதான் கோலியை ஸ்பெஷல் ஆக்குகிறது. அந்தக் காதலின் மீது மரியாதையை நமக்கு கொண்டு வருகிறது.
இது கோலிக்கு மட்டுமல்ல, காதலில் பிரிந்து வாழும் எல்லோருக்குமே பொருந்தும் தானே. ஒருவர் காதலித்த பெண்ணை, கேவலப்படுத்துவது என்பது அவரையே அசிங்கப்படுத்துவது போலத்தான். நிறைவேறாத காதல் எல்லாமே பொய்யானவை அல்ல. பிரிந்துப் போன எல்லா ஆணும்/பெண்ணும் ஏமாற்றியவருமல்ல. அவரவர் சூழல், அவரவர் வாழ்வு.
ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதில் தொடங்கி மரியாதை கொடுப்பது வரை ஆயிரம் வழிகள் உண்டு. கோலி இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.