அது ஓர் அழகான தோட்டம். அதில் ஏராளமான பழ மரங்களும், பூச்செடிகளும் நிறைந்திருந்தன. பல ஜாதி மரங்கள் கம்பீரமாக நிமிர்ந்து நின்றன. குளுமையான நிழல், பறவைகளின் குதூகலமான குரல்கள். அது ஒரு ரம்மியமான இடம். ஊரில் உள்ளவர்கள் இன்பமாகப் பொழுதை போக்க, அந்தத் தோட்டத்துக்குத்தான் வருவார்கள். பணக்கார வீட்டார் தங்கள் குழந்தைகளைத் தள்ளு வண்டியில் வைத்து ஒற்றையடிப் பாதையில் உல்லாச நடை போடுவர்.
இப்படி ஒரு குழந்தையை அழைத்துச் சென்றபோதுதான் அது நிகழ்ந்திருக்க வேண்டும். குழந்தைகளின் கைகளுக்கு கம்பளி உறை போட்டிருந்திருக்கின்றனர். குழந்தைகளுக்கு அது இம்சையாக இருந்ததோ அல்லது நழுவி கீழே விழுந்து விட்டதோ தெரியவில்லை. ஒரு கையுறை அந்த நடைபாதையில் அநாதையாகக் கிடந்தது. பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் அழகிய சின்னஞ்சிறு கம்பளிக் கையுறை.
அந்த வழியாக நடந்து வந்த ஒரு பாட்டி கம்பளி உறையைப் பார்த்தாள். 'எந்தக் குழந்தையுடையதோ? இப்படி வழியில் கிடக்கிறதே...' என்று அதை எடுத்து, மரத்தில் மாட்டினாள். கையுறையைக் காணாதவர்கள் நாளைக்கு இங்கு வந்தால் எடுத்துப் போகட்டுமே என்ற நல்லெண்ணத்துடன்.
ஆனால், பாட்டி மாட்டிய மரத்தில் ஒரு வாலாட்டிக் குருவி வசித்து வந்தது. அது ரொம்பப் பேராசைக்கார குருவி. சிவந்த மார்பு, மஞ்சள் வால், நீல இறகு பார்க்க அழகாக இருக்கும். ஆனால், பழகுவதற்கு முசுடு. அது வசித்து வந்த மரத்தில் ஏராளமான பழங்கள் இருந்தன.
ஆனால், அந்த வாலாட்டி குருவி, வேறு எந்தப் பறவையையும் அந்த மரத்தில் உள்ள கனிகளைத் தொடவிடாது. அத்தனை சுயநலம். அந்த மரத்தில்தான் பாட்டி கம்பளி உறையை மாட்டி விட்டுப் போயிருந்தாள்.
வாலாட்டிக் குருவி, 'க்விக்... க்விக்' என்று தாவித் தாவி அதன் அருகே வந்தது.
'இது என்ன புதிதாக இருக்கு?' என்று எட்டிப் பார்த்தது. என் உடல் அளவுக்குச் சரியாக இருக்கிறதே! ம்... கதகதப்பாகவும் இருக்கிறது என்று அதன் உள்ளே புகுந்து ஆராய்ந்தது. பிறகு வெளியே வர முயற்சி செய்தது. அதனால், வெளியே வரமுடியவில்லை.
''ஹா...ஹா! இதுவும் நல்லதுக்குத் தான். இதிலிருந்தபடியே வேடிக்கை செய்கிறேன். என்னுடைய இந்த மரத்தின் பழங்களைக் கொள்ளையடித்துப் போக வரும் பறவைகளை மிரட்டி, விரட்டச் சரியான சாதனம் இது,'' என்று மகிழ்ந்தது வாலாட்டிக் குருவி.
அது எண்ணியபடியே மைனா வந்தது. வாலாட்டி கம்பளி உறைக்குள்ளிருந்தபடியே தாவியது. அதனால், வெள்ளை உறை ஊசலாடியது. பாவம் மைனா பயந்து பறந்தோடி விட்டது. வாலாட்டிக்குச் சிரிப்பான சிரிப்பு. அடுத்து கிளி வந்தது.
'வந்தாயா? வா, வா, ஒரு பழத்தைக் கூட விடமாட்டாயே நீ!' என்று கருவிக் கொண்டே வாலாட்டிக் குருவி, தாவித் தாவிக் குதித்தது. இதனால் வெள்ளைக் கம்பளி உறை வேகமாக ஆடியது. வாலாட்டி உள்ளிருப்பதை அறியாத கிளி அலறி அடித்துக் கொண்டு ஓடியது. இப்படி அந்த மரத்துக்கு வந்த ஒவ்வொரு பறவையையும் பயமுறுத்தி விரட்டியது வாலாட்டி.
''ஏதோ பூதம் பிசாசு... வெள்ளையாக...'' என்று கலவரத்துடன் பறவைகள் பேசிக் கொள்வதைக் கேட்ட வாலாட்டிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
ஆனால், இந்தச் சிரிப்பும், மகிழ்ச்சியும் எத்தனை நேரத்துக்கு? அதற்குப் பசித்தது. அந்தச் சின்ன இடத்துக்குள் முடங்கிக் கிடப்பது அதன் உடலில் வலியைக் கொடுத்தது. 'தமாஷ் போதும் இனி வெளியேறிச் சாப்பிடப் போகலாம்,' என்று வெளியேற முயன்றது.
ம்ஹும்... அதனால் வெளியே வர முடியவில்லை. கம்பளி உறை அதன் உடலின் பிடிப்பாகப் பொருந்திவிட்டது.
ஐயையோ! இப்படியே இதற்குள்ளேயே இருந்தால் நான் பட்டினியால் சாகத்தான் வேணும்!
''ஐயோ! என்னைக் காப்பாற்றுங்களேன்,'' என்று கதறியது. ஆனால், ஒரு பறவையும் அதன் அருகில் வரவில்லை ஏன்?
அது ஏதோ, 'பேய், பிசாசு' என்ற எண்ணத்தில் எல்லாப் பறவைகளும் எட்டி நின்றபடி அதையே பார்த்துக் கொண்டிருந்தன.
இரவு முழுவதும் அந்தச் சிறையிலேயே சிக்கித் தவித்து கண்ணீர் விட்டுக் கதறியபடி இருந்தது வாலாட்டி. ஒருநாள் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் இருந்ததால், கவலையும் பீதியும் அதன் உடலை இளைக்கச் செய்துவிட்டன. ஆகவே, மறுநாள் வெளியேறுவதற்கான அதன் முயற்சி பலனளிக்க, விடுதலையும் கிடைத்தது.
''ஆண்டவா! இனி என் சகோதரப் பறவைகள் எதையும் அலட்சியமாக நினைக்க மாட்டேன்; பயமுறுத்த மாட்டேன்; இம் மரத்தின் பழங்களை நான் மட்டுமே தின்பதற்கு வைத்துக்கொள்ள மாட்டேன். இனி எல்லாருடனும் சிநேகமா இருப்பேன்,'' என்று கூறியபடி இறுகிப்போன இறக்கைகளை நீவியபடி பசியை தணித்துக் கொண்டது குருவி.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.