'இப்படியெல்லாம் கொள்ளையடிக்க முடியுமா?' என அதிர வைக்கிறது தமிழக சிறைகளில் நடக்கும் ஊழல் விவகாரங்கள். தினம்தினம் கைதிகளின் உழைப்பில் நடக்கும் ஊழல்களைப் பார்த்துக் கொதித்துப் போயிருக்கிறார்கள் கைதிகள்.
தமிழகத்தில் புழல், கடலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்பட ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. தவிர, பெண் கைதிகளுக்காக புழல், வேலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட சிறைகள் செயல்படுகின்றன. இவற்றில் 22 ஆயிரம் கைதிகள் அடைபட்டுள்ளனர். இவர்களின் நல்வாழ்வுக்காக சிறைத்துறை டி.ஜி.பியாக இருந்த நட்ராஜ், ஃபிரீடம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
இதன்மூலம் சிறைக்கைதிகள், தாங்கள் தயாரிக்கும் பொருட்களை நல்ல விலைக்கு விற்கலாம். இதில் வரும் லாபத்தின் ஒரு பகுதி கைதிகள் அக்கவுண்ட்டில் செலுத்தப்படும்' என்று சொல்லி உற்சாகப்படுத்தினார். வருடக்கணக்கில் சிறையில் இருக்கும் கைதிகள் இதன் மூலம் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். இதன்பிறகு, கைதிகள் செய்ய வேண்டிய வேலைகளையும் பட்டியலிட்டார்கள். அதில், டெய்லரிங், காலணி, மெழுகுவர்த்தி தயாரிப்பு, பாண்டேஜ், குழந்தைகள் நாப்கின், இனிப்பு, கார
வகைகள், இயற்கை காய்கறி, கீரை, தச்சு வேலைகள், சலூன் கடை, பினாயில் தயாரிப்பு என நூற்றுக்கணக்கான பொருட்களைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்பத் தொடங்கினர். அதிலும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கைதிகளின் தயாரிப்புகளுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பும் கிடைத்தது. இந்தநிலையில்தான், கைதிகளின் உழைப்பில் மிகப் பெரிய ஊழல் நடக்கிறது. கடந்த ஆறு மாதமாக கைதிகளுக்கு சம்பளமே தரவில்லை' எனக் கூறி அதிர வைத்தனர் கைதிகள் சிலர்.
இதுபற்றி நமக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பினார் புழல் சிறையில் உள்ள தண்டனை சிறைவாசி ஒருவர், அவர் விவரித்த தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகத்தில் இருந்தது. "பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். செய்த குற்றத்தின் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காகத்தான் எனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்து வந்தேன். இன்னும் செய்து கொண்டிருக்கிறேன். நன்றாக வேலை தெரிந்த ஒருவருக்கு நாளொன்றுக்கு 100 ரூபாய் வழங்க வேண்டும் என விதி உள்ளது. இதில், ஐம்பது சதவீதம் எனக்கான உணவு மற்றும் பராமரிப்புச் செலவாகவும், நான் செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 20 சதவீதமும், மீதமுள்ள 30 சதவீதத் தொகை எனது கணக்கிலும் வரவு வைக்கப்படும். அனைத்து சிறைகளிலும் இந்த நடைமுறை உள்ளது. இதில், கைதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள முன்வருவதில்லை. இதற்காக சேர்ந்த தொகை மட்டுமே பத்து கோடியைத் தாண்டும். இந்தப் பணம் என்ன செய்யப்படுகிறது? என்பதற்கு எந்தக் கணக்கு வழக்கும் இல்லை. எங்களுக்கான உணவை அரசு வழங்குகிறது. இதற்காக நாங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? நாங்கள் தயாரிக்கும் பொருட்களை ஃபிரீடம் அங்காடிகள் மூலம் விற்கிறார்கள். நல்ல லாபமும் வருகிறது.
இதன்மூலம் சிறைக்கைதிகள், தாங்கள் தயாரிக்கும் பொருட்களை நல்ல விலைக்கு விற்கலாம். இதில் வரும் லாபத்தின் ஒரு பகுதி கைதிகள் அக்கவுண்ட்டில் செலுத்தப்படும்' என்று சொல்லி உற்சாகப்படுத்தினார். வருடக்கணக்கில் சிறையில் இருக்கும் கைதிகள் இதன் மூலம் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். இதன்பிறகு, கைதிகள் செய்ய வேண்டிய வேலைகளையும் பட்டியலிட்டார்கள். அதில், டெய்லரிங், காலணி, மெழுகுவர்த்தி தயாரிப்பு, பாண்டேஜ், குழந்தைகள் நாப்கின், இனிப்பு, கார
இதுபற்றி நமக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பினார் புழல் சிறையில் உள்ள தண்டனை சிறைவாசி ஒருவர், அவர் விவரித்த தகவல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகத்தில் இருந்தது. "பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். செய்த குற்றத்தின் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காகத்தான் எனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்து வந்தேன். இன்னும் செய்து கொண்டிருக்கிறேன். நன்றாக வேலை தெரிந்த ஒருவருக்கு நாளொன்றுக்கு 100 ரூபாய் வழங்க வேண்டும் என விதி உள்ளது. இதில், ஐம்பது சதவீதம் எனக்கான உணவு மற்றும் பராமரிப்புச் செலவாகவும், நான் செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 20 சதவீதமும், மீதமுள்ள 30 சதவீதத் தொகை எனது கணக்கிலும் வரவு வைக்கப்படும். அனைத்து சிறைகளிலும் இந்த நடைமுறை உள்ளது. இதில், கைதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ள முன்வருவதில்லை. இதற்காக சேர்ந்த தொகை மட்டுமே பத்து கோடியைத் தாண்டும். இந்தப் பணம் என்ன செய்யப்படுகிறது? என்பதற்கு எந்தக் கணக்கு வழக்கும் இல்லை. எங்களுக்கான உணவை அரசு வழங்குகிறது. இதற்காக நாங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? நாங்கள் தயாரிக்கும் பொருட்களை ஃபிரீடம் அங்காடிகள் மூலம் விற்கிறார்கள். நல்ல லாபமும் வருகிறது.
இதில், டெய்லரிங் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே முறையான சம்பளத்தை வழங்குகிறார்கள். பேக்கரி, ஷு தயாரிப்பு, பெல்ட் தயாரிப்பு, இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட மற்ற வேலைகள் அனைத்திற்கும் கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. முன்பு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்னுடைய குடும்பத்தார் வந்து இந்த சம்பளத்தை வாங்கிச் செல்வார்கள். இப்போதெல்லாம் சம்பளம் வாங்க வந்தாலே, அதிகாரிகள் எறிந்து விழுகிறார்கள். மீறி கேட்டால், 'உன் புருஷன் செஞ்ச பொருள் எதுவும் சரியா விக்கலை. அது விற்பனையாகும்போது சொல்லி அனுப்புறோம். வந்து வாங்கிட்டுப் போ' என மிரட்டுகிறார்கள். மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
சிறையில் இருந்தாலும் குடும்பத்திற்கு எதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் என நம்பித்தான் வேலை பார்க்கிறோம். அதுவும், எட்டு மணி நேர வேலைதான் என அரசின் தொழிற் கொள்கை இருக்கிறது. நாங்கள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால் இரவு பத்து மணிக்குத்தான் தூங்கவே செல்கிறோம். அதிகப்படியான உடல் உழைப்பை வாங்குகிறார்கள். சம்பளம் தராதது, அதிக நேர உழைப்பு போன்றவற்றால் மனஅழுத்தம் அதிகமாகிறது. மீறிக் கேள்வி எழுப்பினால் அடி, உதைதான் கிடைக்கிறது. நாங்கள் தயாரிக்கும் பொருட்களை கூடுதல் கண்காணிப்பாளர் ஒருவரின் மேற்பார்வையில் விற்பனை செய்கிறார்கள். எந்தப் பொருள் என்ன விலை என்பதையெல்லாம் கைதிகள் அறிந்து கொள்ளும் வசதியும் இல்லை. அவர்கள் இஷ்டத்திற்கு விற்று லாபம் பார்க்கிறார்கள். எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. சிறைக் கைதிகள் உழைப்பின் மூலம் மாதம் பல கோடி ரூபாய்கள் அதிகாரிகள் பங்கிற்குப் போகிறது. இதுதொடர்பாக, கேள்வி எழுப்புவர்களை தனிமைப்படுத்தும் வேலைகள்தான் நடக்கிறது. சிறைத்துறையில் நியாயமான விசாரணை நடந்தால் இந்த ஊழல் அம்பலமாகும்" என்றார் மிகுந்த வேதனையோடு.
சிறைக் கைதிகளை சீர்படுத்தத்தான் அரசு இயந்திரம் இருக்கிறது. அவர்களை மனநோயாளிக்குவதுதான் அந்த இயந்திரத்தின் நோக்கம் என்றால், அடிப்படையிலேயே கோளாறு என்றுதானே அர்த்தம்?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.