எம்ஜிஆர் குண்டடி பட்ட பின்னர் அவர் பேசுவது யாருக்கும் புரியாது. அப்போதெல்லாம் அதைப்பற்றி எழுதாத பத்திரிகைகள், விஜயகாந்த் பேசுவது சரியாக புரியவில்லை. குளறுபடியாக பேசுகிறார் என்று எழுதுகின்றன. அதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரேமலதா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்ைசயில் ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நேற்று முன்தினம் தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில் தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: எப்பொழுதும் விஜயகாந்த் குறித்து பத்திரிகைகளில் எழுதப்படுகிறது. இதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். எம்ஜிஆர் குண்டடிபட்ட பின்னர் பொதுக்கூட்டங்களில் அவர் பேசுவது என்ன என்று யாருக்கும் சரியாக புரியாது. ஆனால் அதை பற்றி எந்த பத்திரிக்கையிலும் எழுதவில்லை.
ஆனால் விஜயகாந்த் பேசுவது மட்டும் சரியாக புரியவில்லை. குளறுபடியாக பேசுகிறார் என்று எழுதுகிறார்கள். அதே போல் அதிமுக குறித்து எந்த ஊடகங்களிலும் செய்தி வருவது இல்லை. விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார் என்று எழுதுகின்றனர். ஆனால் எனக்கு தெரியாமல் அவர் எப்படி செல்வார். அவர் சென்னையில் கட்சிப்பணியை செய்து கொண்டு இருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு தற்பொழுது ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அது குறித்து ஏன் யாரும் எழுதவில்லை. விஜயகாந்த் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதிமுகவில் என்ன நடக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? அதிமுகவில் நேர்காணல் எங்கு நடக்கிறது. நேர்காணல் செல்பவர்கள் யாரை பார்த்து பேசுகின்றனர். சுவரை பார்த்தா பேசுகிறார்கள்?. ஏன் அதையெல்லாம் தெரிவிப்பது இல்லை. இவ்வாறு பிரேமலதா பேசினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி பிரேமலதா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.