ஆவுடையனூர் என்னும் ஊரில் பாஸ்கர் என்பவன் வசித்து வந்தான். அவன் மனைவி லதா, சரியான வாயாடி; சண்டைக்காரி. பாஸ்கரனோ பொண்டாட்டிதாசன்.
அவன் மனைவி, அவனை மிகவும் கேவலமாக நடத்துவாள். நாலு பேருக்கு முன்னால் அவமானப்படுத்துவாள். அவன் எதிர்த்து ஏதாவது கேட்டுவிட்டால், அவனுக்கு பல நாட்களுக்குச் சோறு, தண்ணீர் தரமாட்டாள்.
பாஸ்கரன் வீட்டுக்குள் பொண்டாட்டி தாசன். ஆனால், வீட்டை விட்டு வெளியே சென்று விட்டால், அவனது வாய்ச் சவடாலுக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது. அவனது நண்பர்கள் நாலுபேர் கூடிவிட்டால் தன் குடும்பத்தைப் பற்றி பிரமாதமாக கதை அளப்பான்.
வீட்டில் என் மனைவி என்னைக் கண்டால் 'கிடுகிடு' என்று நடுங்குவாள். எனது பேச்சை என் மனைவி கொஞ்சம் கூட மீறவே மாட்டாள். ஏதாவது தாறுமாறாக பேசினால், அவளை அடித்து நொறுக்கி விடுவேன் என்றெல்லாம் தற்பெருமை பேசுவான். அதைக் கேட்கும் நண்பர்களுக்கெல்லாம் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
'வீட்டுக்கு வீடு வாயிற்படி' என்பதைப் போல, பாஸ்கரனின் நண்பர்களும் பொண்டாட்டி தாசர்களாவே இருந்தனர். வீட்டில் அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொஞ்சம் கூட இல்லை. 'மனைவிமார்கள் ஆட்டி வைத்தபடி தாங்கள் ஆடினர். பாஸ்கரன் மட்டும் தன் மனைவியை அடக்கி, ஒடுக்கித் தன் கட்டுக்குள் வைத்துக் குடும்பம் நடத்துகிறானே... உண்மையிலேயே இவன் 'மாவீரன்தான்!' என்று அவர்கள் பொறாமைப் பட்டனர்.
பாஸ்கரனுக்கு, மூர்த்தி என்று ஒரு நண்பன் இருந்தார். அவனும் பொண்டாட்டிக்கு அடங்கிய புருஷன். அவனுக்கு பாஸ்கரன் எப்படி குடும்பம் நடத்துகிறான் என்பதைப் பற்றித் தெரிந்து, தானும் அதுபோல நடக்க விரும்பினான்.
ஒருநாள்-_
''அருமை நண்பனே! நாங்களெல்லாம் எங்கள் பொண்டாட்டிகளுக்கு பயந்து கட்டுப்பட்டு நடக்கிறோம். ஆனால், நீ மட்டும் எப்படி பொண்டாட்டியை அடக்கி உன் கட்டுக்குள் வைத்திருக்கிறாய் என்பதை என் கண்ணாரப் பார்க்க வேண்டும் என்ற ஆசையாய் இருக்கிறது!'' என்று கேட்டான் மூர்த்தி.
''அதற்கென்ன! நாளை மதியம் நீ என் வீட்டுக்குச் சாப்பிட வா. அப்போது வீட்டில் என் அதிகாரம் எப்படி கொடிகட்டிப் பறக்கிறது என்பது உனக்கு நன்றாய் விளங்கும்,'' என்று தற்பெருமை பொங்கக் கூறினான் பாஸ்கரன்.
மறுநாள் மதிய உணவுக்கு வருவதற்கு மூர்த்தி ஒப்புக் கொண்டான்.
அன்று மாலை வீட்டுக்குச் சென்ற பாஸ்கரன், தன் மனைவியிடம் கெஞ்சிக் கூத்தாடி, தன் நண்பன் மறுநாள் மதியம் உணவு உண்ண வரும் விஷயத்தை நடுங்கிக் கொண்டே சொன்னான்.
''என் நண்பன் மூர்த்தி வந்து சாப்பிட்டு விட்டுப் போகும் வரை நீ எனக்கு மிகவும் அடங்கி நடப்பவள் போல நடிக்க வேண்டும். தயவுசெய்து நான் என்ன சொன்னாலும் நீ எதிர்த்து பதில் பேசக்கூடாது. நண்பன் சாப்பிட்டு விட்டுப் போன பிறகு உன் விருப்பப்படி நான் நடந்து கொள்கிறேன்,'' என்று கெஞ்சினான்.
''சரி நீங்கள் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்வதால், போனால் போகிறது என்று ஒரு நாளைக்கு மட்டும் விட்டுக் கொடுக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நாளைக்கு உங்கள் நண்பர் முன் மூன்று முறைதான் நீங்கள் என்னை அதிகாரம் செய்யலாம். அதற்கு மேல் உங்கள் அதிகாரத்தைக் காட்டினால் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் ஜாக்கிரதை!'' என்று கண்டிப்புடன் கூறினாள் மனைவி.
'ஏதோ இந்த அளவுக்காவது மனைவி தன் மானத்தை காப்பாற்ற ஒப்புக் கொண்டாளே...' என்று ஆனந்தப்பட்டான் பாஸ்கரன். அந்த நினைவுகளுடன் தூங்கப் போனான்.
அடுத்த நாள் மதியம் அவன் நண்பன் மூர்த்தி ஆர்வத்துடன் சாப்பிட வந்தான்.
நண்பர்கள் இருவரும் கை கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தனர். பாஸ்கரனின் மனைவி அவர்கள் இருவருக்கும் இலை போட்டு பரிமாறினாள்.
பாஸ்கரன் அலட்சியமாக, ''என்ன சமையல் செய்து இருக்கிறாய்? காய்கறிகள் எல்லாம் வேகவேயில்லை. வர வர உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது,'' என்று திட்டினான்.
உடனே அவன் மனைவி, 'ஒன்று' என்று எண்ணிக் கொண்டாள்.
சற்று நேரத்தில் பாஸ்கரன் மிகவும் கோபம் அடைந்தவன் போலப் பாவனை செய்து கொண்டு, ''என்னடி நாயே, குழம்பா இது? வாயில் வைக்கவே சகிக்கவில்லை. ஒரே உப்பாக இருக்கிறது ச்சே,'' என்று திட்டினான்.
உடனே, அவன் மனைவி தன் மனத்துக்குள்ளாக, 'இரண்டு' என்று எண்ணிக் கொண்டாள்.
''சமையல் செய்யும் பொழுது உன் அறிவு எங்கே போயிருந்தது? சோறு சரியாக வேகாமல் அரிசியாக இருக்கிறதே? நீ குடும்பம் நடத்தும் லட்சணத்தைப் பார்த்தால் ஊரே சிரிக்கும்போல் இருக்கிறது,'' என்று கத்தினான்.
அவன் மனைவி, 'மூன்று' என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
பாஸ்கரனின் அதிகாரத்தை மூர்த்தி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். நண்பர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்து, நாற்காலியில் அமர்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டார்.
அப்போது மூர்த்தி, பாஸ்கரனை மிகவும் பாராட்டினான்.
''உண்மையிலேயே வீரம் மிகுந்த ஆண்தான் நீ. உன் மனைவியைப் பெட்டிப் பாம்பாக அடக்கி வைத்திருக்கிறாயே! நீ பேசுகிற பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசவே உன் மனைவி பயப்படுகிறாளே! உண்மையில் எனக்கு உன்னைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது,'' என்று கூறினான் மூர்த்தி.
நண்பனின் புகழ் மொழியைக் கேட்டு பாஸ்காரனுக்கு தலைகால் புரியவில்லை. மனைவிக்குக் கொடுத்திருந்த வாக்குப்படி, தான் மூன்று முறை அதிகாரம் செய்தாயிற்று என்பதை மறந்து விட்டான். நண்பன் முன்னிலையில் மேலும் மனைவியை அதிகாரம் செய்ய எண்ணி, ''அடியே சீக்கிரம் கொஞ்சம் குடிக்க நீர் கொண்டு வாடி!'' என்று அதிகாரமாக கூச்சலிட்டான்.
வீட்டுக்குள்ளிருந்த மனைவிக்கு அவன் குரல் கொடுத்தது நன்றாக கேட்டது. என்றாலும், அவள் எரிச்சலுடன் தண்ணீர் கொண்டு வரவில்லை.
தான் தண்ணீர் கேட்டு நீண்ட நேரமாகியும் மனைவி தண்ணீர் கொண்டு வராததை கண்ட பாஸ்கரன் மிக கோபம் அடைந்தவனாக, ''முட்டாள் ஜென்மமே தண்ணீர் கேட்டு எவ்வளவு நேரமாகிறது. காது கேட்க வில்லையா? வர வர நீ கழுதை மாதிரி ஆகிவருகிறாய். நான்கு பேர் அறிய உன்னை உதைத்தால்தான் உனக்குப் புத்தி வரும்,'' என்று பெரும் குரலில் கத்தினான் பாஸ்கரன்.
அவ்வளவுதான். அதுவரை வீட்டுக்குள் அமைதியாகயிருந்த அவன் மனைவி, ஆத்திரமுற்றாள். சமையல் அறைக்குச் சென்று குழம்புச் சட்டியை எடுத்துக்கொண்டு பாஸ்கரனை நோக்கி கோபமாக நடந்தாள்.
பாஸ்கரனை நெருங்கியதும் அவன் தலையில் குழம்புச் சட்டியைப் போட்டு படீரென உடைத்தாள். சட்டி உடைந்து குழம்பெல்லாம் பாஸ்கரனின் உடம்பெல்லாம் வழிந்தது. சட்டியின் விளிம்பு மட்டும் பாஸ்கரனின் கழுத்தில் மாலை போல் மாட்டிக் கொண்டது. அவனால் கண்களைத் திறக்க முடிய வில்லை.
''ஏன்யா, போனால் போகிறது என்று சற்று விட்டுக் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறுகிறாயே... உன் அதிகாரத்திற்கு பயந்தவள் நான் அல்ல என்பது உனக்கு மறந்து விட்டதா? உன் தகுதி தெரியாமல் என்னை மிரட்டப் பார்க்கிறாயே! வாயை மூடி, பேசாமல் உட்கார்ந்திரு!'' என்று கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்று விட்டாள்.
திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த நண்பனைப், பரிதாபத்தோடு நோக்கினான் பாஸ்கரன்.
''பாஸ்கரா! என் வீட்டிலும் என் மனைவி எவ்வளவோ ரகளைகள் செய்திருக்கிறாள். ஆனால், ஒரு தடவை கூட அவள் என் தலையில் குழம்பு சட்டியைப் போட்டு உடைத்ததில்லை. ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் உன் மனைவியை விட என் மனைவி ஆயிரம் மடங்கு மேல்,'' என்று கூறிவிட்டு சென்றான் மூர்த்தி.
திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தான் பாஸ்கரன்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.