சைப்ரஸில் உள்ள தனது முன்னாள் மனைவியை சந்திப்பதற்காக விமானத்தை கடத்தியதாக எகிப்து நாட்டை சேர்ந்த இப்ராஹிம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எகிப்து நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை நடுவானில் மர்ம கும்பல் கடத்தியுள்ளதாகவும், அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் முதலில் வெளியானது.

எகிப்து நாட்டை சேர்ந்த 'எகிப்து ஏர்' என்ற பயணிகள் விமானம் இன்று காலை அதே நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா என்ற நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமான குழுவினர் உள்பட 81 பேர் பயணம் செய்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தை மர்ம கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாகவும், தற்போது ஐரோப்பாவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து விமானத்தில் உள்ள ஆயுதம் ஏந்திய நபர்களிடம் எகிப்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், விமானத்தில் உள்ள 4 வெளிநாட்டு பயணிகள் மற்றும் விமானக்குழுவைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்ற அனைவரையும் விடுதலை செய்ய மர்ம கும்பல் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர், விமானத்தை கடத்தியது தனி நபர் என்றும், அவர் எகிப்து நாட்டு குடிமகன் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், எகிப்து நாட்டை சேர்ந்த இப்ராஹிம் சமாஹா (27) என்றும், அவர் அந்நாட்டில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்றும் தெரியவந்தது.
எகிப்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தை கடத்திய இவர், அதனை சைப்ரஸ் நாட்டிற்கு திருப்பியுள்ளார். இப்ராஹிமுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், ‘சைப்ரஸில் புகலிடம் கோருவதற்காக விமானத்தை கடத்தியதாக’ முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், சற்று முன்னர் வெளியான தகவலில் சைப்ரஸில் உள்ள தனது முன்னாள் மனைவியை சந்திப்பதற்காக விமானத்தை கடத்தியதாக இப்ராஹிம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அவர் பொய்யாக வதந்தியை பரப்பியதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் கடத்தல் நாடகம் நடத்தியவரின் பிடியில் விமானக்குழுவினர் உள்ளிட்ட 7 பேர் பிணைக்கைதிகளாக உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.