குழந்தையை கடத்துவது கொலைக்கு சமமான செயல் என்பார்கள், ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் குழந்தை கடத்தல் சர்வசாதாரணமாகிவிட்டது என பகீர் குற்றம் சாட்டுகிறார் நடிகர் பார்த்திபன்.
கடந்த மாதம் சென்னை வால்டாக்ஸ் சாலையில், பெருமாள்–லட்சுமி தம்பதி பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியபோது, தங்களது 6 மாத பெண் குழந்தை சரண்யாவை பறிகொடுத்தனர். குழந்தை காணாமல் போனது குறித்து பூக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், குழந்தை சரண்யா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. குழந்தை சரண்யா கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை, சென்னை பாரிமுனையில் உள்ள சட்டக்கல்லூரி காவல் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் வசிக்கும் விமல்–நேத்தா ஆகியோரின் 3வது மகன் ரோகேஷ் என்று பெயரிடப்பட்ட 8 மாத ஆண் குழந்தையுடன் வசிக்கும் இடத்தில் முதல்நாள் தூங்கியுள்ளார். ஆனால் அதிகாலை 4 மணிக்கு மேல் குழந்தையை காணவில்லை. ரோகேஷ் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, சட்டக்கல்லூரி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரோகேஷும் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடத்தப்படும் குழந்தைகள் பிச்சை எடுக்க வைக்கப்படுகிறார்கள் என தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்துக்குள் 2 குழந்தைகள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியிருக்க நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் கடந்த வருடத்தில் 656 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக பகீர் கிளப்புகிறார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், சென்னையில் குழந்தை கடத்தல் தொடர்கிறது, பிளாட்பாரங்களில் பெற்றோர்களுடன் படுத்துறங்கும் பிஞ்சு குழந்தைகள் மாயமாகின்றன. கடந்த மாதத்தில் 2 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த வருடத்தில் தமிழ்நாட்டில் 656 குழந்தைகள், அதில் பெண் குழந்தைகள் 305 மாயமான குழந்தைகள் நிலவரம் எல்லாம் கலவரமாகவே உள்ளது. தன் குட்டிகளை பாதுகாக்க காட்டில் மிருகங்கள் படும்பாட்டை விட வல்லரசாகப்போகும் நம் நாட்டில் மிருகத்தனமான கடத்தலை செய்பவர்களை தெய்வம் நின்று கொல்லும் முன்னதாக காவல்துறை கண்டு கொள்ளவேண்டும்,
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், கம்பிகளின் இடைவெளிகள் கடுமையான சட்டங்களால் அடைக்கப்பட வேண்டும். குறிப்பாக 6 மாத, 8 மாத குழந்தைகளை அபகரித்து செல்வது என்பது நம்மை உயிரோடு அறுத்து ரத்தமும் சதையுமான நம் இதயத்தை கிண்டி கிளறி நம் உடலில் இருந்து பிடிங்கு செல்வதை போன்ற காட்டுமிராண்டி தனமானது. இன்னும் தாய்ப்பால் கூட நிறுத்தாத பிஞ்சு உயிர்களான விமல், சரண்யாவை போல் பலர் இன்னும் பட்டியல் நீள்கிறது. நெஞ்சு வரண்டு அலறுவது நம் காதுகளில் கேட்கும். அதை தடுக்க வேண்டும். அடுத்து இன்னொரு உயிரை நம்முடைய உயிராய் நினைத்து காப்போம்" என கூறியுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து நடிகர் பார்த்திபன் காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஆண்டு தோறும் 1,500 முதல் 2,000ம் வரையில் கடத்தல் தொடர்பான புகார்கள் காவல் நிலையங்களில் பதிவாகிறது என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. அதில் அதிகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தொடர்பானது என்கிறார்கள் காவலர்கள். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகின்றன. கடந்த ஜனவரி முதல் இதுவரை 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.