Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

இளமை தோற்றத் தரும் எண்ணெய் மஜாஜ்


முதுமை பல காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கு நாம் உண்ணும் உணவுகளும் ஒரு வகை காரணம். அதுமட்டுமல்லாமல் சருமத் திற்கு ஏற்ற  முறையான பராமரிப்பும் இல்லை. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும்.  தளர்வை சரிசெய்ய முதுமை  தோற்றத்தை தடுக்க எண்ணெய் மஜாஜ் மிகவும் அவசியம். மஜாஜ் செய்வதால் ஏற்படும் பயன்கள் எ ன்ன என்று பார்க்கலாம்.

திராட்சை எண்ணெய்


இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல்  திராட்சை  எண்ணெயில் மஜாஜ் செய்தால் சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்து வி டும். முகம் நன்கு  பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் இந்த மஜாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக  தெரிவீர்கள்.

அவகோடா எண்ணெய்


நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம் உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பது தான்.  ஆனால் இந்த  அவகோடா எண்ணெயில் இருக்கும் ஒமேகா3பேட்டி ஆசிட் அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து தளர்ச்சியை குறைத்து விடும். ஆகவே  இந்த எண்ணெயை வைத்து மஜாஜ் செய்தால் சருமம் இருக்கமடைந்து முகத்தில் சருமத்துளைகள்  அதிகம் காணப்பட்டாலும் அவற்றை விரைவில்  போக்கி விடும்.   
 
நல்லெண்ணெய்

உடலுக்கு செய்யும் மஜாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய்  மஜாஜ் பருக்களை  ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெய்யை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய்  சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி  விடும்..

ஆலிவ் எண்ணெய் 

என்ணெய் வகைகளில் மிகச்சிறந்த எண்ணெய் எதுவென்றால் அது ஆவில் எண்ணெய் என்று சொல்லலாம். இதில் ஆக்ஸிடன்ட்  மற்றும் ஓமேகா2  பேட்டிஆசிட் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக இந்த எண்ணெயை வைத்து மஜாஜ் செய்யும் போது எண் ணெயை எக்காரணம் கொண்டும்  சூடேற்றக்கூடாது. அவ்வாறு சூடேற்றினால் அதில் உள்ள சத்துகள் அனைத்தும் அழிந்துவிடும்.எனவே ஆயில் மஜாஜ் செய்து உங்கள் இளமையை  தக்க வைத்துக்கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.