டண்டணக்கா என்ற ஊரில் கோழி கனகா வசித்து வந்தது. கோழி கனகாவின் முட்டைகளை பல நாட்களாக திருடித் தின்றது பாம்பு ஒன்று.
பல நாட்களாக தாம் இடுகின்ற முட்டைகள் எல்லாம் காணாமல் போய் விடுவதால் கோழிக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. எப்படியாவது தனது முட்டைகளை திருடுபவர் யாரென கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வேதனையில் வேலியோரத்தில் ஒளிந்தபடி தனது முட்டையை கண் காணித்தது.
வெகு நேரமாக கோழியை காணாததால், கோழி வேலியைத் தாண்டி எங்கோ சென்று விட்டதென முடிவு செய்த பாம்பு, மெல்ல முட்டையின் அருகே வந்து அதை உடைத்து குடிக்கத் தொடங்கியது.
பாம்பு, முட்டையை குடிப்பதைக் கண்ட கோழி திடுக்கிட்டது. வேகமாக பாம்பின் முன் சென்று, ""பாம்பு அண்ணா... பாம்பு அண்ணா! என் முட்டையை திருடிச் சாப்பிடுவது சரியா? உருவத்தில் என்னை விட பெரியவரான நீங்கள் இந்த தவறை செய்யலாமா?'' என்று கனிவோடு கேட்டது.
"கோழியே! என் முன்னால் நின்று பேச உனக்கு தைரியம் வந்து விட்டதா? நீ இடும் முட்டைகளை அப்படித்தான் குடிப்பேன். நீ முட்டை இடுவதால் தான் இவ்ளோ நாட்களாக உன்னை விட்டு வைத்திருந்தேன். இனி உன்னை என்ன செய்கிறேன் பார். இதோ உஸ்... உஸ்...' என்று சீறியது.
நொந்து போன கனகா கோழி, "ஆண்டவா! என்னை காப்பாத்து...'' என்று கதறியது.
அந்த நேரம் அவ்வழியே வந்த கீரிப்பிள்ளை ஒன்று பாம்பை கடித்துக் குதறி துண்டு துண்டாக்கி விட்டது.
கோழியிடம் வீரத்தை காட்டிய பாம்பினால், கீரியிடம் தன் வீரத்தை காட்ட முடியவில்லை. அப்படியே உயிரை விட்டது.
ஆபத்து நேரத்தில் தன்னை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொன்னது கனகா கோழி.
நம்மை விட நோஞ்சான்களிடம் நம் வீரத்தை காட்டினால், உங்களை விட பலசாலி மாணவர்கள் உங்களை நொறுக்குவார்கள் என்பதை மறந்துடாதீங்க... குட்டீஸ்..

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.