Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 29, 2016

ஆஸ்திரேலியாவை கேலி செய்து இந்திய ரசிகர்கள் வெளியிட்ட மவுக்கா மவுக்கா வீடியோ


கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலககோப்பை போட்டியில் வெளியான "மவுக்கா.. மவுக்கா" வீடியோ விளம்பரம் பிரபலமடைந்தது.தற்போது நடந்து வரும் 20 ஓவர உலககோப்பை போட்டியிலும்  இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு இது போன்ற விளம்பரம் மீண்டும் வெளியிடப்பட்டது.

அரையிறுதி வாய்ப்புக்காக இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் நேற்று  மொகாலியில் மோதின இந்திய அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபடசமாக கோலி அவுட் இன்றி 82 இந்த 3-வது வெற்றியின் மூலம் இந்திய அணி அரைஇறுதி சுற்றை எட்டியது. ஆஸ்திரேலியாவின் கனவு கலைந்தது.

முன்னதாக இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவை கிண்டலடிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

'பி' பிரிவில் இடம்பெற்ற வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்டன.

ஆஸ்திரேலியாவும் அந்த அணிகளுடன் விமானத்தை பிடித்து நாடு திரும்பி விடும் என்று கூறுவது போல் இதை உருவாக்கியுள்ளனர். இணையத்தில் வைரலாகி வரும்  இந்த வீடியோவை தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.






No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.