Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 30, 2016

மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு


தேவையான பொருட்கள்: இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெங்காயம் - 1 (நறுக்கியது) தேங்காய் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி வர மிளகாய் - 5 ஜாதிக்காய் - 1 கசகசா - 1/2 டீஸ்பூன் மல்லி - 1/2 டீஸ்பூன் சோம்பு - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் பட்டை - 2 ஏலக்காய் - 3 கிராம்பு - 3 தக்காளி - 3 (நறுக்கியது) பசலைக்கீரை - 1/4 கப் வேக வைத்த முட்டை - 4 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - சிறிது

 செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, மல்லி, ஜாதிக்காய், காஷ்மீரி வர மிளகாய், பட்டை, ஏலக்காய், கிரம்பு, சீரகம் சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அத்துடன் தேங்காய் பொடியையும் சேர்த்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். 

பின் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து மிதமான தீயில் தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். பிறகு அதில் பசலைக்கீரை சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டிப் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு ரெடி!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.