Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

அம்மாடியோவ்... கருணாநிதி பிரச்சார வேனில் இம்புட்டு வசதியா? (படங்கள்)


சொகுசு வசதிகளுடன் தயாரான பிரச்சார வேனில் திமுக தலைவர் கருணாநிதி தனது வீட்டில் இருந்து பாலவாக்கம் வரை ஆய்வு பயணம் மேற்கொண்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஊர், ஊராக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இதற்காக கோவை மாவட்டம் சிவானந்தா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ‘வை-பை’, ஹோம் தியேட்டர், எல்.இ.டி. டி.வி. சாய்தள மெத்தை, டைனிங் டேபிள் உள்பட ‘குளுகுளு’ சொகுசு வசதிகளுடன் 7 பேர் அமரக் கூடிய பிரச்சார வேன் தயாரானது.
அந்த வேன் கோவையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு, தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். வேனில் உள்ளே இருக்கைகள் மற்றும் வசதிகளை ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு பிரச்சார வேன் கொண்டு வரப்பட்டது. அதில், கருணாநிதி பயணம் செய்து, தனது உடல்நிலைக்கு ஏற்றவாறு பிரசார வேன் இருக்கிறதா?. என்பதை சோதித்து பார்த்தார்.
 
கோபாலபுரத்தில் இருந்து பிரசார வேனில் புறப்பட்ட கருணாநிதி பாலவாக்கம் வரை சுமார் 11.1 கிலோ மீட்டர் பயணம் செய்த பின்னர் கோபாலபுரம் திரும்பினார். கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் உடன் சென்றனர்.

சக்கர நாற்காலி மூலம் கருணாநிதி வேனில் ஏறுவதற்கு வசதியாக சாய்தள படிகட்டுகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. 93 வயதில் அவர் பிரசாரத்து வருவதே மாபெரும் வெற்றிதான், ஹெலிஹாப்டர் மகாராணிகளுக்கு நடுவே வேனில் பிரச்சாரம் செய்வது பாராட்டுக்குரியது. நிச்சயம் வெற்றி பெறுவார்.

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.