Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 30, 2016

உலகம் முழுவதும் ஒரே ராணுவம் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


மதுரை பெத்தானியாபுரம் காந்தி தெருவைச் சேர்ந்த எஸ்.கணேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘உலகில் ஒவ்வொரு நாடும் தங்களது ராணுவ பலத்தைக் காட்டி, பக்கத்து நாட்டை அச்சுறுத்துகின்றன. இதனால், உலக அமைதி ஏற்படவும் மூன்றாம் உலகப் போர் நடைபெறாமல் இருக்கவும், உலகில் உள்ள அனைத்து நாடுகளின் ராணுவங்களையும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைத்து, ஒரே ராணுவத்தை உருவாக்கினால் போர்களே நடைபெறாது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செயலருக்கு 3 முறை மனுக்களை அனுப்பி னேன். இந்த மனுவை அவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்ப வில்லை. எனது மனுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செய லாளர், சார்க் நாடுகளின் தலைவ ருக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதி பதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் ஆகியோர், இது போன்ற மனுக்களை தாக்கல் செய்வது நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகும்.

மனு தள்ளுபடி செய்யப் படுகிறது என உத்தரவிட்டனர். மனுதாரருக்கு நீதிபதிகள் ரூ.10,000 அபராதம் விதித்தனர். அந்த தொகையை ஒரு மாதத்துக்குள் உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்தும்படி அவர்கள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.