Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 30, 2016

கோஹ்லிதான் அடுத்த சச்சின்: ஹர்பஜன் புகழாரம்


உலக கோப்பை டி20 தொடரில், நேற்று முன் தினம் மொகாலியில் நடந்த  போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி,  அரையிறுதிக்கு முன்னேறியது.  51 பந்துகளில் 82 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவிய விராத் கோஹ்லிக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை  வெளிப்படுத்தி வரும் அவரை, முன்னாள் வீரர்கள் பலர், மாஸ்டர் பிளாஸ்டர்  சச்சினுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.  இந்திய அணியின் மூத்த சுழற்பந்து  வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும், அடுத்த சச்சின் கோஹ்லிதான் என கூறியுள்ளார்.  

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்த உலகம் கண்டதில் நிச்சயமாக  சச்சின்தான் மிகவும் அரிதான வீரர். ஆனால் விராத் கோஹ்லி,  இதேபோன்று  தொடர்ந்து கடினமாக உழைத்தால், அடுத்த சச்சின் அவர்தான். அப்படி நடந்தால்  எனக்கு மிகவும் பெருமிதமான நிகழ்வாக இருக்கும்.  ஏனெனில் கோஹ்லியின் இளம்  வயதில் இருந்தே அவருக்கு நாங்கள் ஆதரவாக இருந்து வருகிறோம். அவருக்கு  வாழ்த்துக்கள்,’’ என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.