Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

பாதங்கள் மென்மையாக மாற


என்னுடைய பாதங்கள் எப்போதும் வறண்டு போய்க் காணப்படுகின்றன. மென்மையாக மாற என்ன வழி?

ஆலோசனை சொல்கிறார் அழகுக்கலை வல்லுனர் சந்தானலட்சுமி... 
ஒரு அகன்ற பாத்திரத்தில் வெந்நீர் (மிதமான சூட்டில்) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் ஷாம்பு, ஒரு கை கல் உப்பு, ஒரு டீஸ்பூன்  எலுமிச்சைச்சாறு, அரை மூடி டெட்டால்  என சேர்த்துக் கலந்து கொள்ளவும். அந்தப் பாத்திரத்தில் உங்கள் பாதங்கள் முழுமையாக படும்படி  வைத்திருக்க வேண்டும்.

அப்படியே உங்கள் கால் களை லைட்டாக மசாஜ் செய்யவும். அரைத்த மருதாணி இலை அல்லது மருதாணி பவுடரை எடுத்து பாதங்களில் தடவி  அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வெது வெதுப்பான நீரில் பாதங்களை நன்கு கழுவவும்.

வாரம் ஒருமுறை இப்படிச் செய்தால் பாதங்கள் மென்மையாகும். கால் நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிப் பளிச்சிடும். பாதங்களில் அதிகம்  வெடிப்புகள் இருப்பவர்கள், கால்களைத் தேய்த்துக் கழுவ ‘ப்யூமிஸ் ஸ்டோன்’ பயன்படுத்தக் கூடாது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.