தாம்பரத்தில் குடிபோதையில் 4 வயது பேத்தியை தொலைத்த பாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை போலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்.
போதையில் பாட்டி
விழுப்புரத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவரது மனைவி மேரி இறந்துவிட்டார். இவர் தனது 4 வயது மகளுடன் சைதாப்பேட்டையில் தங்கி கூலிவேலை செய்துவந்தார். சார்லசின் மாமியார் தனது பேத்தியை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு தாம்பரம் வந்தார்.
அப்படி வந்த இடத்தில் ஒரு மதுபான கடைக்கு சென்று அளவுக்கு அதிகமாக மது குடித்தார். இதனால் அவருக்கு போதை அதிகமானது. தாம்பரம் பஸ் நிலையத்தில் நள்ளிரவில் மது போதையில் அவர் மயங்கி விழுந்தார். அவரது அருகில் 4 வயது குழந்தை உட்கார்ந்து கொண்டு பாட்டியை எழுப்ப முயன்றது. ஆனால் அவர் போதை தெளியாததால் எழுந்திருக்கவில்லை.
குழந்தை மீட்பு
பஸ் நிலையத்தில் நின்ற சிலர் அவர் மீது தண்ணீர் ஊற்றியும் போதை தெளியவில்லை. பாட்டி போதை மயக்கத்தில் கிடக்க, பக்கத்தில் சிறுமி அழுதபடி உட்கார்ந்து இருந்தது. இதைப்பார்த்த சிலர் பிச்சைக்காரர்கள் என நினைத்து காசு போட்டுச்சென்றனர்.
இந்த காட்சிகளை நீண்டநேரமாக பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து, பெண் குழந்தையை அழைத்துச் சென்று ஒரு தொண்டு நிறுவனத்தில் தங்கவைத்தார்.
தந்தையிடம் ஒப்படைப்பு
சிறிது நேரத்தில் போதை தெளிந்த பாட்டி குழந்தையை காணவில்லை என கூறி சைதாப்பேட்டைக்கு சென்று உறவினர்களிடம் தெரிவித்தார். விடிந்ததும் குழந்தையை தேடி தாம்பரம் வந்த சார்லசிடம் பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் போலீசார் அழைத்துச் சென்றதாக கூறினர்.
குழந்தையின் போட்டோவுடன் சார்லஸ் போலீஸ் நிலையம் சென்று விசாரிக்க, அவருக்கு அறிவுரை கூறி குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.