Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 29, 2016

ஒரு ஜோடி நாய்க்குட்டியை ரூ.1 கோடிக்கு வாங்கிய பெங்களூரு தொழில் அதிபர் சீனாவில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது


பிறந்து 2 மாதங்கள் மட்டுமே ஆன ஒரு ஜோடி நாய்க்குட்டியை ரூ.1 கோடிக்கு பெங்களூரு தொழில்அதிபர் வாங்கியுள்ளார். நாய்க்குட்டிகள் சீனாவில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.

ஒரு ஜோடி நாய்க்குட்டி ரூ.1 கோடி

பெங்களூரு பனசங்கரியில் வசித்து வருபவர் சதீஷ். தொழில்அதிபரான இவர் நாய்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர், ரூ.1 கோடிக்கு சீனா தலைநகர் பீஜிங்கில் இருந்து ‘கொரியன் தோசா மஸ்தீப்’ என்ற இனத்தை சேர்ந்த பிறந்து 2 மாதங்கள் மட்டுமே ஆன ஒரு ஜோடி நாய்க்குட்டிகளை வாங்கினார்.

இந்த நாய்க்குட்டிகள் பீஜிங்கில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. விமான நிலையத்தில் வந்து இறங்கிய நாய்க்குட்டிகளை சதீஷ் ஆர்வமுடன் வரவேற்று கொஞ்சினார். அப்போது, ஒரு நாய்க்குட்டிக்கு உடல்நல குறைபாடு இருப்பது தெரியவந்தது.

சிகிச்சை

பின்னர், அந்த நாய்களை தனது வீட்டுக்கு கொண்டு சென்ற சதீஷ் அருகே உள்ள கால்நடை டாக்டரிடம் நாய்க்குட்டிகளை காண்பித்தார். டாக்டர் நாய்க்குட்டிகளை பரிசோதனை செய்தார். அப்போது, ஒரு நாய்க்குட்டி மூக்கு ஒழுகலால் பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த நாய்க்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சீனாவில் இருந்து இந்தியா வந்த இந்த ஒரு ஜோடி நாய்க்குட்டி கொழுகொழுவென காண்போரை கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த நாய்க்குட்டிகள் குளிர் பிரதேசங்களில் வளர கூடியது என்பதால் இதற்கென சிறப்பு வசிப்பிடத்தை ஏற்படுத்தி கொடுக்க சதீஷ் முடிவு செய்துள்ளார். தொழில்அதிபர் சதீஷ் 2 நாய்க்குட்டிகளை ரூ.1 கோடிக்கு வாங்கிய சம்பவம் கர்நாடக மக் களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.