உணவுக்கு மணமூட்டும் பொருளாகவே பொதுவாகக் கருதப்படும் கறிவேப்பிலை, கணக்கற்ற மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது.
அதனால்தான், நாட்டு மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கறிவேப்பிலை அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.
அதனால்தான், நாட்டு மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கறிவேப்பிலை அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.
கறிவேப்பிலையில் 63 சதவீதம் நீரும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 6.1 சதவீதம் புரதமும், 4 சதவீதம் தாது உப்புகளும், ஒரு சதவீதம் கொழுப்பும் இருக்கின்றன.
சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், இரும்புச் சத்து, தாமிரச் சத்து, கந்தகச் சத்து, குளோரின், ஆக்சாலிக் ஆசிட் போன்றவையும் கறிவேப்பிலையில் உள்ளன.
கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போல தயாரித்தோ சாப்பிடலாம்.
கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போல தயாரித்தோ சாப்பிடலாம்.
நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாமல் இருந்தால் கொழுப்புகள் படிந்து தொப்பை ஏற்படும். கறிவேப்பிலையை தினமும் காலையில் சிறிதளவு உட்கொண்டு வந்தால் கொழுப்புகளைக் கரைப்பதுடன், உடல் செயலியல் மாற்றத்தையும் அதிகரிக்கும்.
கறிவேப்பிலை, உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது, எனவே உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.
கெட்ட கொழுப்புகளை எரிக்கும் பொருள் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. எனவே, கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்படும் நபர்கள் இதை தினமும் காலையில் உட்கொண்டு வரலாம்.
கறிவேப்பிலையில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால், உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் சீராக ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்கிறது. அதன் மூலம், உடலில் ரத்த அணுக்கள் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது.
இதில் ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால் சருமத்துக்குப் பொலிவைக் கொடுக்கிறது. கறிவேப்பிலையை ‘பேஸ்ட்’ போல அரைத்து, அதனுடன் மஞ்சள் சேர்த்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் பருக்கள் மறைந்துவிடும்.
கறிவேப்பிலையை அதிகமாக உட்கொள்ளும்போது, ரோமத்தின் கருமை காக்கப்படும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கறிவேப்பிலை குறைப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றதாகும். அவர்கள், உணவில் கறிவேப்பிலையை தாராளமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.