Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 25, 2016

விபத்துக்களைத் தவிர்ப்போம் முகத்தைப் பாதுகாப்போம்


சர்வதேச வாய் மற்றும் முகம் தொடர்பான அறுவை சிகிச்சை நிபுணர்கள் தினத்தின் நிமித்தம் சுகாதார அமைச்சின் சுகாதாரக் கல்வி பணியகம் அண்மையில் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொகடர் பாலித மஹீபால. மேலதிகப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டா, கொழும்பு பல் வைத்திய நிலைய சத்திர சிகிச்சை நிபுணர்களான பத்மா சில்வா, காமினி நவரட்ன, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல் வைத்திய பீட சிரேஷ்ட விரிவுரையாளர் நதீன ஜயசூரிய ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அதி முக்கியத்துவம் பெற்று விளங்கும் இந்த அவயவங்கள் திறந்தபடி காணப்படுவதால் அவை அதிக அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கின்றன. அதிலும் உலகில் கைத்தொழில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த அச்சுறுத்தல் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வாகனங்களின் அதிகரிப்பு இந்த அச்சுறுத்தலில் பிரதான பங்கு வகிக்கின்றது. அதனால் இந்த நூற்றாண்டில் வீதி விபத்துக்கள் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்த போதிலும் அண்மைக் காலமாக அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வீதி விபத்துகளுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை வருடா வருடம் குறைவடைந்து வருகின்ற அதேநேரம் வளர்முக நாடுகளில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவது பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது. . இதேவேளை இலங்கை பல் வைத்திய நிலையம் விபத்துக்கள் காரணமாக வாய் மற்றும் முகம் தொடர்பான பாதிப்புக்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற வருபவர்கள் மத்தியில் 2014 மற்றும் 2015 வருடங்களில் ஆய்வொன்றை நடாத்தியது.
இந்த ஆய்வில் இந்நாட்டில் இடம்பெறும் விபத்துக்களில் 60 வீதமானவற்றிற்கு மோட்டார் பைசிகிள்களே காரணம் என்பதும், மோட்டார் பைசிகிள் விபத்துக்கள் காரணமாகவே முகமும் வாயும் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்தது. அதிலும் தாடை எழும்புகளும். கன்ன எலும்புகளும் சிதைவடைவதற்கு மோட்டார் பைசிகிள் விபத்துக்களே காரணம் என்பதும் கண்டறியப்பட்டது. இதன்படி வீதி விபத்துக்களால் முகமும் வாயும் தான் அதிகம் பாதிக்கப்படுவது நன்கு தெளிவாகிறது. அதேநேரம் விபத்துக்களின் போது முகமும் பற்களும் பாதிக்கப்படுமாயின் அதன் காரணத்தினால் பலவிதப் பாதிப்புக்களும் ஏற்படும் குறிப்பாக பற்கள் சிதையுமாயின் உணவு உண்பதில் சிரமத்திற்கு முகம் கொடுக்க நேரிடும். அதேவேளை பற்கள் அமைவுற்று இருக்கும் கீழ் மற்றும் மேல் தாடை எலும்புகளோ அல்லது கன்ன எலும்புகளோ சேதமடையுமாயின் முகத்தின் இயல்பான தோற்றத்தில் வித்தியாசங்கள் ஏற்படும். அத்தோடு உணவு உண்பதிலும் சிரமங்கள் ஏற்படும். கண் பார்வையும் பாதிக்கப்படும். வாயை வழமை போன்று திறக்க முடியாத நிலைமை கூட ஏற்படலாம். இவற்றின் விளைவாக மன அழுத்தம் கூட ஏற்பட எற்பட முடியும்
ஆனால் முகம் மற்றும் வாயினதும் அவை அமைவுற்று இருக்கும் என்புகளினதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தான் இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன. இதனை ஒவ்வொருவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப செயற்பட வேண்டும். அப்போது வீதி விபத்துக்களால் ஏற்படும் உபாதைகளையும் பாதிப்புகளையும் பெரிதும் குறைத்து கொள்ள முடியும். அது உடல் உள ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை சேர்க்கும். அத்தோடு விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்வதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்தத் தவறக் கூடாது.
ஆகவே வீதி விபத்துக்களைத் தவிர்த்து கொள்வதிலும் உடல் உபாதைகளைக் குறைத்து கொள்வதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.