Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 26, 2016

ஓபரா ஹவுஸ்!-வரலாற்று சிறப்பு மிக்க இடம்


ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத்வேல்ஸின் தலைநகரமாக சிட்னியுள்ளது. அங்குள்ள ஹார்பர் பிரிட்ஜ் ஒரு காலத்தில் புகழ்பெற்றதாக விளங்கியது. அதன் புகழ் மங்கும்படியாக நவீன பாணியில் ஒரு புதிய கட்டடம் உருவாயிற்று. அதுதான், 'சிட்னி ஓபரா ஹவுஸ்.' இதை வடிவமைத்த கட்டடக்கலை நிபுணர் டேனிஷ் காரரான ஜோரன் அட்ஸான். ஜோரானின் வரை படம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1957ம் ஆண்டு பிரம்மாண்டமான அமைப்பாக உருவாகத் தொடங்கியது.
ஆனால், மதிப்பீடு செலவு எகிறிக் கொண்டே போக, எதிர்ப்பு கிளம்பியது. இன்றைய அதன் மதிப்பு (செலவுத் தொகை) 5 கோடியே 40 லட்சம் பவுன்கள். எதிர்ப்புகளை விரும்பாத அட்ஸான் தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ஓபரா ஹவுஸ் கட்டுமானப் பணியை முடிக்கும் பொறுப்பு வேறு நபர்களிடம் தரப்பட்டது. ஓபரா ஹவுஸ் அதிசயத்தை எலிஸபெத் ராணி 1973ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திறந்து வைத்தார்.
வெளேர் என்ற தன் வெள்ளி இறக்கைகளை விரித்தபடி பறக்கத் தொடங்கும் அழகிய ராட்சசப் பறவையின் தோற்றத்தை, எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் ரசித்து மகிழும்படி அமைக்கப் பட்டுள்ளது சிட்னியின் ஓபரா ஹவுஸ். கலை நிகழ்ச்சிகள் நடக்கும் கலைக்கூடக் கட்டடம் இது. நாடக அரங்கமும் உண்டு. கபேக்களும், ரெஸ்டாரண்டுகளும் இதனுள்ளேயே உள்ளன. உலகின் மிகப் பெரிய தியேட்டர் கர்ட்டன்களை (திரைச்சீலை) கொண்டது என்று, பெருமை பேசுவதற்கும் தகுதியுடையது இந்த ஓபரா ஹவுஸ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.