Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2016

மிகவும் பரபரப்பாக அமைந்த இந்தியா-வங்கதேச போட்டி: பிக்சிங் செய்யப்பட்டதா? ஐசிசி விசாரிக்க பாக். மாஜி வீரர் வலியுறுத்தல்


இந்தியா-வங்கதேசம் இடையே கடந்த 23ம் தேதி பெங்களூருவில் நடந்த போட்டி, பரபரப்பாக அமைந்தது. வங்கதேசத்தின் வெற்றிக்கு கடைசி  ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் மூன்று பந்துகளிலேயே 9 ரன்கள் கிடைத்தது. அடுத்ததாக 3 பந்துகளில் வெறும் 2 ரன்கள்  தேவை என்ற நிலையில், முஷ்பிகூர் ரகீம், மகமதுல்லா, முஷ்டாபைஜூர் ரகுமான் ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 1  ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. 

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஸ்பின்னர் தவ்சீப் அகமது கூறுகையில், ‘‘இந்த போட்டி முடிந்த விதம் எனக்கு  சரியாகப்படவில்லை. இந்த போட்டியை ஐசிசி விசாரிக்க வேண்டும். ஏனெனில் வங்கதேசம் தற்ேபாது அனுபவமற்ற அணி கிடையாது. நல்ல  அனுபவமுடைய வீரர்கள்தான் கிரீசில் இருந்தனர். முதலில் போட்டியை டை செய்ய முயலாமல், பெரிய ஷாட் அடிக்க அவர்கள் ஏன் முயன்றனர் என  தெரியவில்லை,’’ என்றார். 

இந்த போட்டியில் ெவன்றதன் மூலம்தான் இந்தியா, அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. அத்தகைய போட்டியில் பிக்சிங் நடந்திருக்கலாம் என  முதல் ஆளாக பாகிஸ்தானின் தவ்சீப் அகமது குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.