Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 24, 2016

ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் எப்போது அறிமுகமாகிறது தெரியுமா?


ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் அடுத்த 5 ஆண்டுகளில் அறிமுகம் செய்யபட உள்ளது.
ஆப்பிள் நிறுவனம், உலகம் முழுவதும் அதன் ஐஃபோன்களுக்கும், கணினிகளுக்கும் மிகுந்த புகழ்வாய்ந்த நிறுவனமாக திகழ்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆய்வாளரான பைபர் ஜாஃப்ரே ஜீன் முன்ஸ்டர், ஆப்பிள் நிறுவனம் அடுத்ததாக எலக்ட்ரிக் காரை தயாரிக்க உள்ளது என்றார். இந்த ரகசிய எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் திட்டமானது, 5 ஆண்டு திட்டம் போல் செயல்படுத்தபட்டு வருகிறது என ஜாஃப்ரே கூறினார்.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திட்டம், பிராஜக்ட் டைடன் என்று அழைக்கபடுகிறது. இந்த எலக்ட்ரிக் காரை ஆப்பிள் நிறுவனம் தான் வடிவமைத்து வருகிறது. ஆப்பிள் எலக்ட்ரிக் கார் திட்டத்தினுடைய உற்பத்தி பொறுப்பு, அவுட்சோர்ஸிங் அல்லது அயலாக்கம் எனப்படும் பிற நிறுவனங்களிடம் வழங்கபட உள்ளது.
“ஆப்பிள் எலக்ட்ரிக் கார், 2019 அல்லது 2020-ஆம் ஆண்டில் காட்சிபடுத்தபடும். இந்த மாடல், 2021-ஆம் ஆண்டு முதல் தான், விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் மதிப்பு சுமார் 75,000 டாலர்களாக இருக்கலாம். இது இன்றைய காலகட்டத்தில் விற்கபடும் டெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் செடானின் அடிப்படை மாடலின் விலை ஆகும்” என ஜாஃப்ரே தெரிவித்தார்.
இந்த எலக்ட்ரிக் கார் திட்டத்திற்கு என பிரத்யேகமான குழு பணிபுரிந்து வருகிறது. மேலும், இந்த எலக்ட்ரிக் கார் திட்டத்தில் பணிபுரிந்து வரும் குழுவினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கபட்டு வருகிறது.
எந்த காரணத்தை கொண்டும், இந்த எலக்ட்ரிக் கார் திட்டத்தை, ஆப்பிள் நிறுவனம் கைவிடாது என தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த எலக்ட்ரிக் கார் திட்டம் முக்கியமான பணம் கொழிக்கும் திட்டம் என ஆப்பிள் நிறுவனம் புரிந்து வைத்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.