Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 27, 2016

உடலில் வறட்சியை ஏற்படுத்தும் உணவுகள்!


நாம் எடுத்துக்கொள்ளும் சிலவகை உணவுகளால் நம் உடலில் இருந்து நீர் அதிகளவில் வெளியேறுகிறது.
அதுவும், கோடைகாலங்களில் காரமான உணவுளை எடுத்துக்கொண்டால், உங்கள் உடல் வளர்ச்சியடைந்து விபரீதங்களை சந்திக்க நேரிடும்.
சோடாக்கள்
ஜிம் செல்வோர் தாகத்தைத் தணிப்பதற்கு அதிகம் எடுக்கும் ஓர் பானம் தான் சோடாக்கள். ல் உடல் ஆற்றலை அதிகரிக்கும் பானம் என்று சொல்லி விற்கப்படும் இந்த பானத்தை அதிகம் குடிப்பதால் உடல் வறட்சி தான் உண்டாகும்.
ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, குடலில் ஆஸ்மாடிக் அழுத்தத்தை அதிகரித்து, உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும்.
கார்போஹைட்ரேட் உணவுகள்
எடையைக் குறைக்க நினைப்போர் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளைத் தான் அதிகம் உண்போம். ஆனால் இப்படி கார்போஹைட்ரேட் குறைவான டயட்டை அதிகம் மேற்கொண்டால் உடல் வறட்சி தான் ஏற்படும்.
ஏனெனில் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளில் பொட்டாசியம் அதிகம் இருக்கும். இது நீர் இழப்பை உண்டாக்கும்.
எனவே நீங்கள் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை அதிகம் எடுப்பவராயின், குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.
புரோட்டின் உணவுகள்
உடல் வறட்சியை ஏற்படுத்தும் விடயங்களில் புரோட்டின் உணவுகளை அதிகமான அளவில் எடுப்பதும் ஒன்று.
எப்போதும் நாம் எடுக்கும் கார்போஹைட்ரேட்டிற்கு இணையான அளவில் தான் புரோட்டீனை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடல் வறட்சியை அதிகரிக்கும். குறிப்பாக புரோட்டின் பானங்களை அதிகம் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி குடித்தாலும், குடிக்கும் நீரின் அளவை இரட்டிப்பாக்க வேண்டும்.
காபி
காபியும் சிறுநீர் பெருக்கியாகும். அளவுக்கு அதிகமாக காபி குடித்தால், அதனால் உடலில் இருந்து நீர் வெளியேறி, உடல் வறட்சி, தலைவலி போன்றவை ஏற்படும். எனவே ஒரு நாளைக்கு 1-2 கப் காபிக்கு மேல் குடிக்காதீர்கள்.
உப்பு மற்றும் கார உணவுகள்
அதிகப்படியான சோடியம் உடலில் தக்கவைக்கப்படும் நீரின் அளவில் இடையூறை உண்டாக்கி, உடல் வறட்சியை ஏற்படுத்தும். எனவே உப்புள்ள உணவுகளை அதிகமாக எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.
அதுபோன்று கார உணவுகளையும் தவிருங்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.