Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 26, 2016

கொசுக்கள் மட்டுமின்றி, பறவைகள் மூலம் பரவும் மலேரியா: புதிய ஆய்வில் தகவல்


மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகிறது என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால் அவை பறவைகள் மூலமும் பரவுகிறது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் ஹோலி லட்ஸ் பகுதியில் உள்ள கார்னல் பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபததில் இது குறித்து ஆய்வு நடத்தினர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் நூற்றுக்கணக்கான பறவைகள், வவ்வால்கள் மற்றும் பாலூட்டி இன விலங்குகளிடம் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதித்தனர்.
ஆவற்றில் மலேரியா நோயை பரப்பும் கிருமிகள் இருந்தன. அதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி நடத்திய போது மலேரியா கிருமிகள் முதலில் பறவைகளிடம் இருந்து தான் பரவுகிறது என தெரிய வந்தது. அதன் பிறகுதான் அவை வவ்வால்கள் மற்றும் பாலூட்டிகளுக்கு பரவுகின்றன.

அதே நேரத்தில் மனிதர்களுக்கு எப்படி பரவுகிறது என்பதை கண்டறிய முடியவில்லை. அதுகுறித்து தொடர்ந்து ஆய்வு நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.