நடுவானில் எகிப்து பயணிகள் விமானம் கடத்தப்பட்டது. அது, சைப்ரஸ் தீவில் தரை இறக்கப்பட்டது. கடத்தல்காரன் கைது செய்யப்பட்டான்.
எகிப்து விமானம்
எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்ட்ரியா நகரத்தில் இருந்து தலைநகரமான கெய்ரோவுக்கு ‘ஈஜிப்ட் ஏர் பிளைட்’ நிறுவனம் ‘ஏர் பஸ்-320’ ரக பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறது.
வழக்கம்போல நேற்று இந்த விமானம் அலெக்சாண்ட்ரியா நகரத்தில் இருந்து கெய்ரோவுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 56 பயணிகளும், 6 சிப்பந்திகளும், ஒரு பாதுகாப்பு அதிகாரியும் பயணம் செய்தனர்.
நடுவானில் கடத்தல்
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது வெடி குண்டுகள் வைத்து கட்டப்பட்ட பெல்ட்டை இடுப்பில் அணிந்திருந்ததாக கூறப்படுகிற ஒரு நபர், விமானியை மிரட்டி விமானத்தை சைப்ரஸ் தீவுக்கு கடத்தினார். அத்துடன் பயணிகளை பணயக்கைதிகளாகவும் பிடித்தார்.
இதனால் விமானத்தில் பதற்றம் தொற்றிக்கொண்டது.
சைப்ரஸில் தரை இறக்கம்
இது குறித்த தகவல் அறிந்ததும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேல் போர் விமானங்களை விண்ணில் பறக்க விட்டது.
இதற்கிடையே கடத்தப்பட்ட விமானம், கடத்தல்காரனின் உத்தரவின்பேரில் சைப்ரஸ் தீவில் உள்ள லார்னாக்கா நகரில் தரை இறக்கப்பட்டது. விமான கடத்தல் தொடர்பாக விமானி, லார்னாக்கா விமான நிலையத்துக்கு தெரிவித்து விட்டதால் அங்கு போலீசார் தயார் நிலையில் நின்றிருந்தனர். ஆனால் போலீசாரை அங்கிருந்து செல்லுமாறு கடத்தல்காரன் உத்தரவிட்டான்.
கடத்தல்காரன்
கடத்தல்காரனுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அவனது பெயர் செயிப் எல்டின் முஸ்தபா என்று தெரியவந்தது. அவனுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகளை அவன் விடுதலை செய்தான். இருப்பினும் விமான சிப்பந்திகளையும், வெளிநாட்டினர் 4 பேரையும் அவன் தன் பிடியில் வைத்துக்கொண்டான். அரபி மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு கடிதத்தையும் அவன் வீசினான்.
அந்த கடிதத்தை அவனைப் பிரிந்து அங்கு வசித்து வருகிற மனைவி மரினாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தான். அதைத் தொடர்ந்து அவனது மனைவி மரினா, விமான நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, கடிதம் ஒப்படைக்கப்பட்டது.
தீவிரவாத சம்பவமா?
இதற்கிடையே விமான கடத்தல் சம்பவம், தீவிரவாத சம்பவம் அல்ல என்று சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடெஸ் கூறினார். இருப்பினும் எகிப்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கடத்தல்காரன் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இறுதியில் அவன் போலீசாரிடம் சரண் அடைந்தான். அதைத் தொடர்ந்து 7 மணி நேரம் நீடித்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது. கடத்தல்காரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள். அதில், அவன் மன நிலை பாதித்தவன் என தெரிய வந்துள்ளது.
விமானம் கடத்தப்பட்ட எகிப்து நாட்டில் சினாய் தீபகற்ப பகுதியில் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.