கும்பகோணம் என்னும் ஊரில் கஞ்சன் கருணாவும், அவனது மனைவியும் இருந்தனர். இருவரும் கருமிகள். சம்பாதிக்கும் பணத்தில் சில்லறைக் காசு இருந்தால்தான் செலவு செய்து சாப்பிடுவர். முழு ரூபாய் முழுவதையும் அப்படியே சேமித்து வைப்பர்.
ஒருநாள்-
சில்லறைக் காசுக்கு ஒரு அப்பந்தான் சுட முடிந்தது. இரண்டு பேரும் ஒரு அப்பத்தை எப்படிச் சாப்பிடுவது? யாராவது ஒருவர்தான் சாப்பிட வேண்டும். யார் சாப்பிடுவது? என்று இருவரும் வாக்குவாதம் செய்தனர்.
"நான் தான் சம்பாதித்து வந்தேன். ஆதலால், நான் தான் சாப்பிடுவேன்,'' என்றான் கஞ்ச கணவன்.
"இல்லை, இல்லை நான் வீட்டு வேலை முழுவதும் செய்கிறேன். இந்த அப்பத்தையும் நான் தான் சுட்டேன். ஆதலால் நான் தான் சாப்பிடுவேன்,'' என்றாள் மனைவி.
இவர்கள் இவ்வாறு சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, உறவினர் ஒருவர் அங்கே வந்தார். இருவர் வழக்கையும் கேட்டார்.
"இந்த அப்பத்தில் உங்கள் இருவருக்கும் உரிமை உள்ளது. ஆதலால், நான் சொல்கிற படி செய்யுங்கள். அதில் வெற்றி பெற்றவருக்கே இந்த அப்பம்!'' என்றார் அவர்.
"என்ன செய்ய வேண்டும். உடனே சொல்லுங்கள்!'' என்று கேட்டனர்.
"நீங்கள் இருவரும் கண்ணை மூடி தூங்க வேண்டும். யார் பின்னால் எழுந்திருக்கின்றாரோ அவருக்கே இந்த அப்பம் உரியது,'' என்றார்.
அவர்கள் கண்ணை மூடிக் கொண்டதும், அந்த உறவினர் அந்த அப்பத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டார்.
மறுநாள் காலை விடிந்தது. கணவனும், மனைவியும் எழவே இல்லை. முதலில் எழுந்து விட்டால், அப்பம் தங்களுக்குக் கிடைக்காமல் போய் விடுமே என்ற அச்சந்தான் எழாமைக்குக் காரணம். அன்று மாலையும் வந்தது. மறுநாளும் விடிந்தது.
அண்டை அயலாருக்குச் சந்தேகம் வந்து விட்டது.
"இவர்கள் இரண்டு நாட்களாக எழவே இல்லையே... ஒரு கால் இறந்து தான் போய் விட்டார்களோ' என்று எண்ணி விட்டனர்.
அருகில் சென்று எழுப்பிப் பார்த்தனர். இருவரும் அசையவே இல்லை. இருவரும் இறந்து விட்டனர் என்று ஊரார் முடிவு செய்தனர். உடனே இரு பாடைகள் கட்டப் பட்டன. அவற்றில் வைத்துச் சுடுகாட்டிற்குக் கொண்டு சென்று நெருப்பு மூட்டி விட்டனர்.
நெருப்பு எரிந்து முதலில் கணவன் காலைச் சுட்டது. சூடு பொறுக்க முடியாமல் கணவன் எழுந்து ஓடத் தொடங்கினான்.
"ஐயோ, அப்பம் போனதே என்று ஓலமிட்டுக் கொண்டே ஓடினான். கணவன் எழுந்து விட்டான் என்று தெரிந்ததும், "அப்பம் எனக்குத் தான்!'' என்று கூவிக் கொண்டே வீட்டை நோக்கி ஓடலானாள் கஞ்சனின் மனைவி.
ஊராருக்கு ஒன்றும் புரியவில்லை. அதிசயித்து நின்றனர். முதல் நாள் அவர்களைப் படுக்கச் சொன்ன உறவினர் நடந்ததையெல்லாம் விவரமாக விளக்க, அதைக் கேட்ட ஊராருக்கு சிரித்து சிரித்து வாயே வலித்துவிட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.