நேபாளத்தைச் சார்ந்த சந்திர பகதூர் டாங்கி, 1939ம் ஆண்டு பிறந்தவர். ஒரு அடி 9.5 அங்குலம் மட்டுமே கொண்ட இவர்... 2012ம் ஆண்டு உலகின் மிக குள்ள மனிதராக தேர்வு செய்யப்பட்டார். இன்றுவரை இவரது உயரத்தை விட குறைந்தவர் உலகில் கண்டுபிடிக்கப் படவில்லை.
* தனது 73 வயதில் உலகின் மிக குள்ள மனிதராக தேர்வு பெற்ற சந்திரபகதூருக்கு ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் குடும்பத்தின் ஏழாவது குழந்தை.
* நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கே முதல் தடவை, கின்னஸ் சாதனைக்காக, அழைக்கப்பட்டபோதுதான் சென்றார். இவருடைய எடை -15 கிலோ (32 பவுண்டு)
* இது நாள் வரை ஒரு தடவை கூட மாத்திரையோ, மருந்தோ சாப்பிட்டதில்லை. டாக்டரிடம் சோதனைக்கும் சென்றதில்லை.
* இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த ஜோதி ஆம்கிதான் உலகின் மிக குள்ள பெண்மணி. இருவரையும் சேர்த்து நிற்க வைத்து கின்னஸ் புத்தக 57வது பதிப்பில் (அட்டைப் படத்தில்) வெளியிட புகைப்படம் எடுத்தனர்.
* குள்ள மனிதர் சந்திர பகதூர்... உலகின் மிக உயர மனிதர், சுல்தான் கோசனை (8 அடி 3.3 அங்குலம்) 2014ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி சந்தித்து கைகுலுக்கி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
* இவருடைய சகோதரர்களில் 3 பேர் உயரத்தில் 4 அடிக்கும் குறைவாக இருந்தனர்.
* சந்திரபகதூரை உலகின் பல சர்க்கஸ் நிறுவனங்கள், தங்கள் ஸ்பெஷல் காட்சிகளுக்கு அழைத்து, பயன்படுத்தி கொள்கின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.