பைக் மீது அரசு பஸ் மோதியதில் உயிருக்கு போராடியவர்களை காப்பாற்ற முயலாமல் போனில் படம் பிடித்த மக்கள்
மைசூருவில் பைக் மீது அரசு பஸ் மோதியதில் 3 வாலிபர்கள் துடிதுடித்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு மாவட்டம் ஹூன்சூர் தாலுகா ஜோகனஹள்ளியை சேர்ந்தவர் மகேஷ் (32), ரமேஷ் (40), மஞ்சுநாத் (40). இவர்கள் 3 பேரும் கோலஹாலாவில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். எச்.டி கோட்டையை அடுத்த கோலஹாலா மெயின் ரோட்டில் சென்றபோது, எதிரே அதிவேகத்தில் வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட 3 பேரில், ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகேஷ் மற்றும் மஞ்சுநாத் பலத்த காயத்துடன் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் தண்ணீர் கேட்டனர். ஆனால் அப்பகுதி மக்கள் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்காமல் மனிதநேயமின்றி சொந்த ஊர் எது? எதற்காக இந்த பகுதிக்கு வந்தீர்கள் என்று விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள் பதிலளித்தும், ஆம்புலன்சை அழைக்காமல் காலம் கடத்தினர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதற்குள் அவர்களது உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் அரசு பஸ் டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
சம்பவத்தை தொடர்ந்து அவர் தப்பியோடிவிட்டதாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த விபத்து குறித்து எச்.டிகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடு ரோட்டில் 2 வாலிபர்கள் உயிருக்காக போராடிய சம்பவம் அனைவரது, வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாட்ஸ்அப்பில் படம் எடுத்து அனுப்பும் நேரத்தில் அவர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்திருந்தால், 2 பேரும் உயிர் பிழைத்திருப்பார்கள். இதில் ஒரு வாலிபர் தனது கண்ணை தானமாக அளிக்கும்படி சொல்லி உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.