விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் அவையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் விளங்கியவர் தெனாலிராமன். எதையும் மதியால் வெல்ல முடியும் என்பதை ஒவ்வொரு சமயத்திலும் நிரூபித்துக் காட்டி, எல்லாரது இதயங்களிலும் இடம்பிடித்தவர் இவர்.
மன்னர் கிருஷ்ண தேவராயர், தெனாலிராமனிடம் வேடிக்கை காட்ட எண்ணினார். ஏதாவது தந்திரம் செய்து அவரை ஏமாற்றிவிட முடிவு செய்தார். அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் மன்னர்.
அந்தக் காலத்தில் மக்கள் வெல்லமும், கருப்பட்டியும் தான் பயன்படுத்தி வந்தனர். வெள்ளை நிறத்தில் உள்ள 'சீனிச்' சர்க்கரை என்பது மக்களின் கனவாக மட்டுமே இருந்தது. அப்படிச் சீனிச் சர்க்கரை கிடைக்கும் வாய்ப்புக் கிட்டினாலும் அதைப் பார்க்க முடியுமே தவிர மக்களால் வாங்கிப் பயன்படுத்த முடியாது. ஏனெனில், வாங்க முடியாத அளவுக்கு அந்தச் சர்க்கரையின் விலை அதிகமாக இருந்தது. நாட்டை ஆளும் மன்னர்கள் மட்டுமே அதை வாங்கிப் பயன்படுத்த முடியும் என்ற நிலைமை நிலவிய காலமது!
இத்தகைய சூழலில் ஒரு சமயம், ஒரு நாட்டிலிருந்த கடல் கடந்து தூதுவன் ஒருவன் மன்னர் கிருஷ்ணதேவராயரைச் சந்திப்பதற்காக விஜயநகரத்தை நோக்கி வந்தான். அவன் மன்னருக்கு வெகுமதியாக வெள்ளை சர்க்கரை கொண்டு வந்திருந்தான்.
தூதுவன் மன்னரைச் சந்தித்து சர்க்கரை மூட்டையைக் கொடுத்தான். மழை பெய்ததில் சர்க்கரை மூட்டை கொஞ்சம் நனைந்திருந்தது. அதனால், அதனை வெயிலில் காய வைக்கும் படி வேலையாட்களுக்கு உத்தரவிட்டார் மன்னர். வேலையாட்கள் சர்க்கரை மூட்டையை எடுத்து போய் சர்க்கரையைக் கீழே கொட்டி வெயிலில் காய வைத்தனர்.
இந்த வெள்ளைச் சர்க்கரையை, 'சீமை மணல்' என்று கூறி, தெனாலிராமனை ஏமாற்றிவிடலாம் என்று திட்டம் போட்டார் மன்னர். தனது வேலையாளை அழைத்து, ''அடேய்! அரண்மனை விகடகவி தெனாலிராமன் இந்தப் பக்கம் வந்தால், வெயிலில் காய்வது சர்க்கரை என்று சொல்லிவிடாதீர்கள். சர்க்கரை என்று அவன் தெரிந்து கொண்டால் அவன் தின்றே தீர்த்துவிடுவான். எனவே, இது சீமை மணல் என்று கூறி விடுங்கள்,'' என்று சொன்னார்.
அப்போது தெனாலிராமன் அந்தப் பக்கமாக வந்தான். சர்க்கரைக்குக் காவல் காத்துக் கொண்டிருந்த வேலையாளைப் பார்த்து, ''என்னப்பா, வெயிலில் எதையோ காய வைத்துக் கொண்டிருக்கிறாயே, என்ன இது?'' என்று கேட்டான் தெனாலிராமன்.
அரசர் தன்னிடம் கூறியதை நினைவுப் படுத்திக் கொண்ட வேலையாள் தெனாலிராமனிடம், ''விகடகவியாரே! இது சீமையிலிருந்து ஒரு தூதுவனால் மன்னருக்கு வழங்கப்பட்ட மணல். மிகவும் விலை உயர்ந்ததாம். மழை பெய்ததில் கொஞ்சம் நனைந்துவிட்டது. அதனால், வெயிலில் மணலைக் காய வைத்துக் கொண்டிருக்கிறேன்,'' என்று கூறினான்.
''அடடா! சீமை மணலா! இதுவரை நான் பார்த்ததே இல்லை. கையால் கொஞ்சம் தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன்,'' என்று கூறிய, தெனாலிராமன் அதன் மீது கையை வைத்தான்.
''இதனை யாரும் தொடக்கூடாது என்று மன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்,'' என்று கூறிய வேலையாள் தெனாலிராமனின் கையை உதறித் தள்ளி விட்டான்.
தெனாலிராமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று மறைவிடத்தில் போய் கையை நக்கிப் பார்த்தான். அத்துகள்கள் இனித்தன. அது சீமை மணல் அல்ல சீமை சர்க்கரை என்று தெரிந்து கொண்டான்.
சர்க்கரையை மணல் என்று கூறி, தன்னை ஏமாற்றுகின்றனர் என்பதை அறிந்து கொண்ட தெனாலிராமன், தந்திரத்தைத் தந்திரத்தால் தான் வெல்ல முடிவெடுத்தான்.
உடனே தனது வீட்டை நோக்கிப் புறப்பட்டான் தெனாலிராமன். வீட்டுக்குப் போனதும் தன்னுடைய மகளின் காதில் ஏதோ கிசு கிசுத்தான். பின்னர், தெனாலிராமனும், அவனது மகளும் ஆளுக்கொரு பாத்திரத்தை எடுத்தபடி அரண்மனையை நோக்கிப் புறப்பட்டனர்.
அரண்மனைக்குச் சென்றதும் இருவரும் காய்ந்து கொண்டு இருந்த சர்க்கரையைப் பாத்திரங்களில் அள்ளிப் போட்டனர். காவலர் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. இப்படித்தான் செய்வோம், போய் மன்னரிடம் சொல் என்று தெனாலிராமன் காவலரிடம் கூறிவிட்டான். காவலரால் என்ன முடியும்? பாவம்!
உடனே ஓடிப் போய் மன்னரிடம் தெனாலிராமனின் செய்கையைப் பற்றிக் கூறினான் காவலன். மன்னர் தெனாலிராமனின் மீது கோபமும், ஆத்திரமும் கொண்டார். உடனே தெனாலிராமனை அழைத்து வரும்படி கூறினார். தெனாலிராமன் மன்னரிடம் சென்று அவரை வணங்கினான்.
''தெனாலிராமா! எதற்காக சீமை மணலை அள்ளுகிறாய்?''
''மன்னா! நான் ஓரிரு மாதங்களுக்கு முன்பு சீமைப் பசு ஒன்று வாங்கினேன். அதற்கு நன்கு உணவு போட்டேன். அதனால் பாலும் அதிகமாகவே கொடுத்தது அது. என்ன காரணம் என்று தெரியவில்லை. நேற்று இரவு திடீரென்று அந்த சீமைப் பசு இறந்துவிட்டது. அதன் புதைகுழியில் சீமை மணலைக் கொஞ்சம் போட்டுப் புதைப்பதுதான் எங்கள் குல வழக்கம். நல்லவேளை சீமை மணல் தங்கள் அரண்மனையில் காய்ந்து கொண்டிருப்பதை பார்த்தேன். கொஞ்சம் அள்ளி விட்டுப் போகலாமே என்றுதான் வந்து, மணலை அள்ளினேன். மணல்தானே மன்னா? அதில் கொஞ்சம் குறைந்தால், உங்களது செல்வச் செழிப்பு சீரழிந்துவிடுமா என்ன? சீமைப் பசுவுக்கு மணல் கொடுத்த புண்ணியம் உங்களுக்குக் கிட்டுமே,'' என்றான் தெனாலிராமன்.
மன்னர் கோபம் தணிந்து, ''தெனாலிராமா! உன் தந்திரமே தந்திரம்! எனக்கு கொஞ்சம் மணலை விட்டு வை,'' என்று கூறிச் சிரித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.