தெருவில் அப்படியும், இப்படியுமாக ஏதோ யோசனையுடன் அலைந்து கொண்டிருந்தது அந்த நாய்.
தெருவோரமாக நடந்து வந்த பன்றியானது இதனை கவனித்தது.
''நாயே! ஏதோ யோசனை செய்தபடி அப்படியும், இப்படியுமாக அலைந்து கொண்டிருக்கிறாயே... என்ன காரணம்? நீ எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டது பன்றி.
''பன்றியே! நெடு நாட்களாகவே என் மனதில் ஓர் யோசனையானது ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை நிறைவேற்றிடலாமா, அல்லது வேண்டாமா என்ற சிந்தனையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்,'' என்றது.
''நாயே! எதை சிந்தித்தாலும் அதனை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால், அதனை அடியோடு அப்படியே மறந்துவிட வேண்டும்,'' என்றது பன்றி.
''உண்மைதான் பன்றியே! நான் அவ்வாறு செய்யாதது தான் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. இப்போது நான் எனது சிந்தனையை மறக்காமல் உடனே செய்திடலாம் என்று நினைக்கிறேன்,'' என்றது நாய்.
''அப்படியா? இப்போது நீ உடனடி முடிவுக்கு வந்து விட்டாய் என்று தெரிகிறது. உன்னுடைய சிந்தனை என்னவென்று சொல்,'' என்று ஆவலோடு கேட்டது பன்றி.
''பன்றியே! நான் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்தத் தெருவில் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டேன். நேற்று இந்தப் பக்கமாக என் நண்பனான பூனை ஒன்று வந்தது.
''அந்த பூனையானது என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதால், என்னையும் அதன் இருப்பிடத்திற்கு அழைத்தது. அந்தப் பூனையின் இருப்பிடத்திற்குச் சென்று வாழ்ந்திட எனக்கும் ஆசையாக இருக்கிறது. அதே நேரத்தில், இந்தப் பழக்கப்பட்ட இடத்தினை விட்டுச் செல்ல எனக்கு வருத்தமாகவும் இருக்கிறது. எனவே, பூனையுடன் செல்வதா அல்லது, இந்த இடத்திலேயே இருப்பதா என்ற குழப்பத்தோடு என்னுடைய சிந்தனையானது ஓடிக் கொண்டிருக்கிறது,'' என்றது நாய்.
''நாயே! இதில் என் கருத்தினை கூறினால், நீ ஏற்றுக் கொள்வாயா?'' என்று கேட்டது பன்றி.
''கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறேன். உன்னைப் பார்த்தால், அனுபவம் மிக்கவனாக இருக்கிறாய். எனவே, உன்னுடையக் கருத்தினை நான் கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறேன்,'' என்றது நாய்.
''நாயே! ஓரிடத்தில் நெடுநாட்கள் இருப்பது தவறு. இடம் விட்டு இடம் மாறினால்தான் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். அதோடு புத்துணர்ச்சியும் கிடைக்கும். அந்தப் புத்துணர்ச்சி மட்டும் உனக்கு ஏற்பட்டுவிட்டால், நீ சுறுசுறுப்புடன் செயல்படுவாய். அந்த சுறுசுறுப்பே உனக்கு நல்ல ஆரோக்கியத்தையும், வாழ்க்கையையும் அமைத்து தரும்,'' என்றது பன்றி.
''அப்படியானால் நான் இந்த இடத்தினை விட்டு பூனை நண்பனின் அழைப்பின் பேரில் செல்லலாம் என்று உறுதியுடன் சொல்கிறாய் அப்படித்தானே?'' என்று கேட்டது நாய்.
''ஆமாம் நாயே! நான் அதனைத்தான் சொல்கிறேன். எனவே, நீ வேறு எந்த முடிவும் எடுக்காமல் தைரியமாக சென்றிடலாம்,'' என்றது பன்றி.
''பன்றியே! உனக்கு மிகவும் நன்றி! தக்க நேரத்தில் வந்து நீ என் மனக் குழப்பத்தை தீர்த்து வைத்ததும் இல்லாமல், என்னுடைய சிந்தனையையும் தெளிவாக்கிவிட்டாய்,'' என்றவாறு பூனையின் இருப்பிடத்திற்குப் புறப்பட்டுச் சென்றது நாய்.
பூனையோ ஒரு உணவு விடுதியின் பின்புறத்தில் வசித்து வந்தது. அந்த உணவு விடுதியின் சுற்றுப் புறங்களில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. உணவு விடுதியில் வீணாகும் மிச்சமாகும் உணவுகள் எல்லாம் பூனைக்கு கிடைத்தன. பூனையோ அந்த உணவுகளை நாய்க்கும் கொடுத்தது.
புதிதாக நாய் ஒன்று வந்துள்ளதே என்று உணவு விடுதியின் வேலைக்காரர்கள் எல்லாரும் மகிழ்ச்சியடைந்தனர். உணவு விடுதிக்கு காவலாக அந்த நாய் இருக்கட்டும் என முடிவு செய்து அதனை நல்ல முறையில் கவனித்தனர்.
நாயோ, பூனைக்கு நன்றி கூறியது.
''பூனையே! நீ இங்கு வரவேண்டும் என என்னை அழைத்தாய். அதனால் இப்படி ஓர் நல்ல இடத்திற்கு என்னால் வர முடிந்தது. மேலும், நான் இந்த இடத்திற்கு வரவேண்டும் என்று அதிரடி முடிவினை எடுத்திட உதவிய பன்றிக்கும் நன்றி சொல்லிட வேண்டும்,'' என்றது.
''அப்படியானால் நாம் இருவரும் அந்த பன்றியைப் பார்த்திடலாமா? பன்றி வசிக்கும் இடம் உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டது பூனை.
''நான் முன்பு வசித்த இடத்தின் பக்கத்தில் தான் அந்த பன்றியைப் பார்த்தேன். இப்போது நாம் இருவரும் அந்த இடத்திற்குச் சென்றால் அந்தப் பன்றியைப் பார்த்திடலாம்,'' என்றது நாய்.
''சரி நாயே! நாம் இருவரும் இப்போதே புறப்பட்டுச் சென்றிடலாம். அந்தப் பன்றியை சந்தித்திடலாம்,'' என்றது பூனை.
உடனே பூனையும், நாயும் அந்த உணவு விடுதியை விட்டுப் புறப்பட்டன. சிறிது நேரத்தில் அவைகள் இரண்டும் பன்றியை சந்தித்தன.
பன்றியோ, நாயையும், பூனையையும் முகமலர்ச்சியுடன் வரவேற்றது.
''நண்பர்களே! வாருங்கள்! உங்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றது பன்றி.
''பன்றியே! உனக்கு நாங்கள் நன்றி சொல்லிடவே வந்துள்ளோம். நீ என் நண்பனான நாய்க்கு சரியான நேரத்தில் அறிவுரை வழங்கினாய். அதனால்தான் நான் வசிக்கும் இடத்திலேயே என் நண்பனான நாயும் வந்திடவே நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் இப்போது ஓரிடத்திலேயே வாழ்கிறோம்,'' என்றது பூனை.
''நண்பனே! நீ கூறியபடி இடத்தை மாற்றிக் கொண்டதால் நான் ஏராளமான நன்மைகளை அடைந்தேன். ஆனால், அதே நேரத்தில் என் மனதிலும் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு உனக்குத்தான் நன்றி சொல்லிட வேண்டும்,'' என்றது.
''நண்பர்களே! நல்ல அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்வதால் என்றும் நன்மையடையலாம். நீங்களும் உங்களுக்குத் தெரிந்த நல்ல அறிவுரைகளை மற்றவர்களுக்கு கூறுங்கள். அவர்களும் பயன்பெற்று வாழட்டும்,'' என்றது.
பன்றியின் அறிவுரைகளை பூனையும், நாயும் ஏற்றுக் கொண்டன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.