முதல் கதை!
அந்தக் குளிர்காலம் மிகவும் கடுமையாக இருந்தது. கடுங்குளிர். அடிக்கடி பனி பெய்து காற்று எலும்புக்குள்ளே ஊடுருவிச் சென்று குடைவது போன்று சில்லென்று வீசியது.
முல்லாவும், அவரது நண்பர்களும் ஒரு தேநீர் விடுதியில் அமர்ந்து தேநீர் பருகியபடி கதை பேசிக் கொண்டிருந்தனர்.
''இந்த மாதிரி குளிர்காலத்தை எல்லாம் நான் நிறையப் பார்த்துட்டேன். இதெல்லாம் என்னை ஒண்ணும் பண்ணாது. எந்த கணப்பு அடுப்பும் இல்லாமலேயே என்னால ராத்தரி எல்லாம் இருக்க முடியும்,'' என்றார் முல்லா.
அது நண்பர்களுக்குச் சற்று எரிச்சலாக இருந்தது.
''நீங்க சொல்றதை ஏத்துக்கறோம் முல்லா. ஆனா ஒரு நிபந்தனை. கிராமத்து மந்தைவெளிச் சதுக்கத்திலே எந்த விதமான போர்வையோ, சூடு தரக்கூடிய ஒரு பொருளோ இல்லாம நீர் நின்று காட்டணும்!''
''அப்படி நின்னா நீங்க எனக்கு என்ன தருவீங்க?''
''எல்லாருமா சேர்ந்து ஒரு நல்ல விருந்து தர்றோம்! நீங்க தோத்துட்டா, எல்லாருக்கும் நீங்க ஒரு நல்ல விருந்து தரணும்!'' என்று நண்பர் ஒருவர் பதிலளித்தார்.
அன்று இரவு முழுவதும் போட்டி விதியின்படி முல்லா கிராமத்து மந்தைவெளிச் சதுக்கத்தில் எந்தப் போர்வையும், வெப்பம் தரக்கூடிய எந்தப் பொருளின் துணையும் இன்றி இரவு முழுவதும் நல்ல குளிரில் நின்றார்.
அடுத்த நாள் காலையில் தம் நண்பர்களிடம் வெற்றிப் பெருமிதத்தோடு தன் சாதனைப் பற்றிக் கூறினார்.
நண்பர்களில் ஒருவர், ''முல்லா... மந்தை வெளிச் சதுக்கத்திற்கு முந்நூறு அடி தூரத்தில் ஒரு ஜன்னல் தெரிந்ததா?'' என்று கேட்டார்.
''தெரிந்தது!''
''அதில் ஒரு மெழுகுவர்த்தி இரவு முழுவதும் எரிந்ததே பார்த்தீரா?''
''பார்த்தேன்!''
''அந்த மெழுகுவர்த்தியைப் பார்த்துக் கொண்டே இருந்தீரா?''
''ஆமாம். அதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.''
''அப்படியானால் நீர் போட்டியில் தோற்று விட்டீர்!'' என்றார் நண்பர்.
''எப்படி?''
''அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் வெப்பம் உமக்குக் குளிரைத் தாங்க உதவி இருக்கிறது!''
''இது நம்ம முடியாத கதை. ஜன்னலுக்கு பின்னால் இருக்கிற மெழுகுவர்த்தி வெளிச்சம் எப்படி 300 அடி தூரத்தில் நிற்கிற மனிதனுக்கு வெப்பத்தை தரும்?''
முல்லா வாதாடினார்.
''அதெல்லாம் முடியாது. நம்ம போட்டி நிபந்தனை என்ன? துளிக் கூட வெப்பம் தருகிற பொருள் இல்லாமல் குளிரைத் தாங்கணும். அதானே?''
அவர்கள் விடாப்பிடியாக முல்லா தோற்றுப்போனதாகவே உறுதிப்படுத்தினர். அவரும் வேறு வழி இல்லாமல் ஒப்புக் கொண்டு அவர்களை அன்று இரவு விருந்துக்கு வர அழைப்பு விடுத்தார்.
அவர்களும் சிரித்துக்கொண்டும், கும்மாளம் அடித்தவாறு முல்லாவின் வீட்டிற்கு விருந்துக்கு வந்தனர்.
''விருந்து இன்னும் தயாராகவில்லை. கொஞ்சம் உட்காருங்க,'' என்றார் முல்லா.
அவர்களும் உட்கார்ந்தனர்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது. விருந்து பரிமாறப்படவில்லை.
''என்ன ஆச்சா?'' அவர்கள் கேட்டனர்.
''இதோ கொஞ்ச நேரம்...'' இது முல்லாவின் பதில்.
நேரம் மேலும் கடந்தது.
விருந்தின் வாசனையே இல்லை.
''என்ன ஆச்சா?'' அவர்கள் கேட்டனர்.
''இதோ கொஞ்ச நேரம்...'' முல்லா சொன்னார்.
நேரம் மேலும் கடந்தது.
கடைசியில் பொறுக்கவே முடியாத பசி வந்துவிட எல்லாரும் என்னதான் நடக்கிறது என்று பார்க்க முல்லாவின் சமையல் அறைக்குள் நுழைந்தனர்.
உள்ளே பார்த்ததும் அவர்கள் கண்களையே, அவர்களால் நம்ப முடியவில்லை.
ஒரு பெரிய தேக்ஸா கூரை உச்சியின் கீழே தொங்கவிடப்பட்டிருந்தது. தேக்ஸாவின் கீழே ஒரு சிறு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது.
''இங்கே என்ன நடக்கிறது,'' என்று ஒருவர் கேட்டார்.
''கொஞ்சம் பொறுங்க. இப்பத் தான் தீ உறைச்சிருக்கு. சீக்கிரம் சமையல் ஆயிடும். என்று துளிக்கூட முகமாற்றம் இன்றிச் சொன்னார்.''
''என்னய்யா விளையாடறீங்களா?'' தேக்ஸா கூரையிலிருந்து தொங்குது. கீழே மெழுகுவர்த்தி எரியுது. இந்த சூடு உறைச்சு பிரியாணி வெந்துடுமா?''
''என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. நான் முந்நூறு அடி தள்ளி, ஜன்னலுக்கு உள்ளே இருந்த மெழுகுவர்த்தி வெளிச்சம் எனக்கு வெப்பம் தந்தப்போ ஏழடி உயரத்திலே இருக்கிற பிரியாணி வெந்துடாதா?'' என்றார்.
முல்லா தங்களுக்குப் பாடம் கற்பித்துவிட்டதை உணர்ந்து நண்பர்கள் தலை குனிந்தனர்.
இரண்டாம் கதை
முல்லா அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு அறிவாளிகளைச் சந்தித்து அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த அறிவாளிகளில் ஒருவர் முல்லாவை நோக்கி, ''முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும், உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது அது ஏன்?'' என தன் சந்தேகத்தைக் கேட்டார்.
''நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன். உலகத்தின் இரும்பை விடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே அது ஏன்?'' என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா.
''உலகத்தில் இரும்பு தாராளமாக எங்கும் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாக எங்காவது ஓரிடத்தில்தான் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது,'' என்றார் கல்விமான்.
''பொய்க்கும், உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால், உண்மை பேசுபவர்களைக் கண்டு பிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது,'' என்று முல்லா பதில் சொன்னார்.
அந்த விளக்கத்தைக் கேட்டு அறிவாளிகள் இருவரும் மகிழ்ச்சி அடைந்து முல்லாவை பாராட்டினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.