Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2016

யார் யாருக்கு சீட்; மருமகன் சபரீசன் மூலம் ஸ்டாலின் எடுத்த ரகசிய சர்வே....


திமுகவில் எந்த தொகுதியில் யார் வேட்பாளர்களாக நின்றால் வெற்றி பெறுவார்கள்  என சர்வே ஒன்றை தமிழகம் முழுவதும் பொது மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஒரு குழுவை அமைத்து எடுத்து வருகிறார். கடந்த வாரத்தில் தஞ்சாவூரில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதியிலும் அந்த குழு சர்வே எடுத்து சென்றுள்ளதால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.
சமீபத்தில் ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே பயணம் அவர் மருமகன் சபரீசன் எண்ணத்தில் உதித்த திட்டம் என்று கூறப்பட்டது. அதில் ஸ்டாலின் கலர் கலராக உடுத்தியிருந்த ஆடைகள் முதல் அனைத்து விஷயங்களும் சபரீசன் திட்டமிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசபட்டது. அந்த பயணம் முழுக்கவே ஸ்டாலினுடன் உடன் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தவர் அன்பில் மகேஷ்.

நமக்கு நாமே பயணத்தின் வெற்றி இந்த இருவரையும் ஸ்டாலினின் நம்பிக்கைகுரிய தளபதிகள் ஆக்கியுள்ளது. இதன் மூலம் சட்டமன்ற தேர்தலிலும் இவர்களுடைய செயல்பாடுகளுக்கு ஸ்டாலினால் முக்கியத்துவம் தரப்பட்டது. இதனால் வர இருக்கிற சட்ட மன்ற தேர்தலுக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு ஏராளமான நிர்வாகிகள் திமுக மூத்த நிர்வாகிகளை  தவிர்த்து சபரீசனையும், மகேஷ் பொய்யாமொழியயும் சுற்றி வருவதாக கட்சியினர் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலில் இளைஞர்களுக்கு அதிக முக்கியதுவம் அளிக்கபடும் என கூறியுள்ளது இவர்களின் முக்கியதுவத்தை காட்டுகிறது என்றே சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்து இப்போது தமிழகம் முழுக்கவும் யார் வேட்பாளர்களாக நின்றால் சரியாக இருக்கும் என்று சபரீசன் குழு ஒரு சர்வே எடுத்து வருகிறது.

இது குறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியதில் பல தகவல்கள் கிடைத்தன.


கடந்த வாரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவில் யார் வேட்பாளர்களாக நின்றால் வெற்றி பெறுவார்கள் என்று சர்வே எடுக்க ஒரு குழு வந்திருந்தது. இவர்களை அனுப்பி வைத்தது ஸ்டாலின் மருமகன் சபரீசன். 5 பேர் கொண்ட அந்த குழு ஒவ்வொரு தொகுதியிலும் சில நாட்கள் தங்கியிருந்து தொகுதி முழுக்கவும் வலம் வந்தனர்.

சபரீசனின் இந்த சர்வே உள்ளுார் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியாமல் ரகசியம் காக்கப்பட்டது. சர்வே எடுக்க வந்திருந்தவர்கள் பொதுமக்களிடம் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்தவர்கள் பெயரை சொல்லி இவர்களில் யார் நின்றால் ஒட்டு போடுவீர்களா என்று கேட்டுள்ளனர்.

மேலும் எந்தெந்த வேட்பாளர்களுக்கு தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறதா என்றும் தெரிந்து கொண்ட அந்த குழு, இதன் அடிப்படையில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் இத்தனை சதவீதம் என வெற்றி வாய்ப்பு இருக்கிறது என சபரீசனிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  அந்த குழு. குறிப்பாக அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகள் எது என்றும் அங்கு யார் நின்றால் வெற்றி கிடைக்கும் எனவும் எடுத்ததாகவும்  சொல்லபடுகிறது.

ஒரத்தநாட்டில் டி.ஆர் பாலு ஆதரவாளரான காந்தி என்பவரையும் பேராவூரணி தொகுதியில்  பேரூராட்சி தலைவரான அசோக்குமார் என்பவரையும் போட்டியிட வைத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளதாகவும் சொல்கிறார்கள். இப்படி சர்வே எடுத்து வாய்ப்பு கொடுத்தால் கோஷ்டி பூசலுக்கு வாய்ப்பு இருக்காது. வெற்றி எளிதாகும் என ஸ்டாலின் தரப்பு நினைப்பதாகவும் சொல்கிறார்கள்.

 சபரீசன் தரப்பு எடுத்துள்ள சர்வே மூலம் அவர் டிக் செய்பவர்களுக்குதான் சீட் கிடைக்கும் என பேச்சு கிளம்பியுள்ளதால் சபரீசனின் பட்டியலிலி் தாங்கள் இருக்கிறோமா என்பதை தெரிந்துகொள்ள கட்சியினர் அறிவாலயத்திற்கு அலைந்துதிரிய ஆரம்பித்துள்ளனர்.

ஸ்டாலினின் இந்த முயற்சி வெற்றிக்கு எந்த அளவு கைகொடுக்கும் என்பது போகப் போக தெரியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.